புனித ஜெபமாலை அன்னை பேராலயம் (கருமத்தம்பட்டி)
புனித ஜெபமாலை அன்னை பேராலயம், கருமத்தம்பட்டி (Basilica of Our Lady of the Holy Rosary) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கருமத்தம்பட்டி என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். ஜெபமாலை அன்னையின் விருந்து ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை இங்கு கொண்டாடப்படுகிறது. கருமதம்பட்டி 1640 ஆம் ஆண்டு முதலே இங்கு புனித பயணங்கள் வழியாக பக்த்தர்கள் வந்து சென்றுள்ளனர். [1] புனிதர ஜான் டி பிரிட்டோ 3 முறை இந்த தேவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். 1684 ஆம் ஆண்டு மைசூர் ராஜா சரபோஜியின் வீரர்களால் இடிக்கப்பட்டது, ஆனால் விரைவில் மீண்டும் கட்டப்பட்டது. [2] இந்த தேவாலயம் 1784 இல் திப்பு சுல்தானால் மீண்டும் இடிக்கப்பட்டு 1803 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. [3] இணைப் பெருங்கோவிலாக அறிவிக்கப்படுதல்22 சூலை 2019 அன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் தமிழ்நாட்டில் 7-வது திருத்தலமாக திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia