கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி (Karumathampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[2] இது ஒரு சந்தைப்பகுதியாகும். இங்கு விசைத்தறி நெசவு, சைசிங் மில்ஸ் ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன, நகராட்சியாக தரம் உயர்த்துதல்16 அக்டோபர் 2021 அன்று கருமத்தம்பட்டி பேரூராட்சியை, கருமத்தம்பட்டி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[3][4] அமைவிடம்கருமத்தம்பட்டி நகராட்சி கோயம்புத்தூரலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் திருப்பூர் 25 கி.மீ., பல்லடம் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோமனூரில் இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் உள்ளது. கருமத்தம்பட்டி நகராட்சி அமைப்பு27 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 167 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 10071 வீடுகளும், 35,062 மக்கள்தொகையும் கொண்டது.[6][7] கல்வி நிறுவனங்கள்
இணைப்பு நகரங்கள்கருமத்தம்பட்டி, தேசிய நெடுஞ்சாலை எண் 47-இல் அமைந்து உள்ளதால் 24 மணி நேரமும் பேருந்து மூலமாக தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia