புரோடாக்டினியமும்அயோடினும் அல்லது புரோடாக்டினியம்(V) குளோரைடு, புரோடாக்டினியம்(V) புரோமைடு, புரோடாக்டினியம்(V) ஆக்சைடுடன் சிலிக்கான் நான்கையோடைடு வினைபுரிந்தால் புரோடாக்டினியம்(V) அயோடைடு உருவாகிறது.[2]
வினைகள்
150 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் ஆண்டிமனி மூவாக்சைடு சேர்மத்துடன் வினைபுரிந்து PaOI3 மற்றும் PaO2I போன்ற அயோடைடு ஆக்சைடுகளைக் கொடுக்கிறது.[2] இது கலப்பு ஹாலைடுகளை PaBr3I2 பெற 350 °செல்சியசு வெப்பநிலையில் புரோட்டாக்டினியம்(V) புரோமைடுடன் வினைபுரிந்து PaBr3I2 போன்ற கலப்பு ஆலைடுகளைக் கொடுக்கிறது. 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் மோனோகார்பைடுடன் வினைபுரிந்து நான்கையோடைடை அளிக்கிறது.[3]
புரோடாக்டினியம்(V) அயோடைடை சிதைவு வினைக்கு உட்படுத்தி தூய புரோடாக்டினியம் தனிமத்தை அரிசுடிட்டு வான் கிராசு என்ற செருமனிய வேதியியலாளர் உருவாக்கினார்.[4][5]
300 °செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம்(V) அயோடைடை நீண்ட நேரத்திற்கு சூடுபடுத்தினால் அயோடின் வாயு வெளியேறுகிறது.[1]
↑Brown, David; De Paoli, Giovanni; Whittaker, Brian. Conversion of protactinium monocarbide to the penta- and tetrahalides. Journal of the Chemical Society, Dalton Transactions: Inorganic Chemistry (1972-1999), 1976. 14: 1336-1338.