புரோடாக்டினியம்(V) ஆக்சைடு(Protactinium(V) oxide) என்பது Pa2O5. என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐதரசனைப் பயன்படுத்தி இதை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு உருவாகிறது. ஆர்சிடிட்டு வி. குரோசு முதன்முதலில் 1927[1] ஆம் ஆண்டு 2 மில்லிகிராம் சேர்மத்தைத் Pa2O5 தயாரித்தார். புரோடாக்டினியம்(V) ஆக்சைடு அடர் நைட்ரிக் அமிலத்தில் கரைவதில்லை. ஆனால் ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் HF + H2SO4 கலவை ஆகியவற்றில் கரைகிறது. உயர் வெப்பநிலைகளில் கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்களின் திண்ம ஆக்சைடுகளுடன் வினை புரிகிறது[2][3]
பிற புரோடாக்டினியம் சேர்மங்களைப் போல புரோடாக்டினியம்(V) ஆக்சைடும் கதிரியக்கத் தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்டது ஆகும். அரிதாகக் கிடைக்கும் இது மிககுறைவான் தொழில்நுட்பப் பயன்களைக் கொண்டுள்ளது. Nb, Mg, Ga மற்றும் Mn ஆகிய தனிமங்களின் கலப்பு ஆக்சைடுகள் 0.005–0.52% Pa2O5 உடன் மாசாக கலக்கப்பட்டு உயர்வெப்பநிலைகளில் (1300 °செல்சியசு வரை) மின்காப்புப் பொருளாக பீங்கான் மின்தேக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.
↑Sellers, Philip A.; Fried, Sherman; Elson, Robert E.; Zachariasen, W. H. (1954). "The Preparation of Some Protactinium Compounds and the Metal". Journal of the American Chemical Society76: 5935. doi:10.1021/ja01652a011.