புரோடாக்டினியம்(V) புளோரைடு
புரோடாக்டினியம்(V) புளோரைடு (Protactinium(V) fluoride) என்பது PaF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் புளோரைடும் சேர்ந்து இந்த ஆலைடு உருவாகிறது. தயாரிப்புபுரோமின் முப்புளோரைடு அல்லது புரோமின் பெண்டாபுளோரைடுடன் 600 °செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம்(V) ஆக்சைடைச் சேற்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோடாக்டினியம்(V) புளோரைடை தயாரிக்கலாம்.:[1] புரோடாக்டினியம்(V) குளோரைடு அல்லது புரோடாக்டினியம்(IV) புளோரைடுடன் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் வாயுவை செலுத்தியும் புரோடாக்டினியம்(V) புளோரைடை தயாரிக்கலாம்.[1] நீரேற்று வடிவ புரோடாக்டினியம்(V) புளோரைடை புரோடாக்டினியம்(V) ஆக்சைடு மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் ஆகியவற்றின் நீர்த்த கரைசல்களை வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.[1] புளோரின் கொண்ட புரோடாக்டினியத்தின் அணைவுச் சேர்மங்களை சிதைவு வினைக்கு உட்படுத்தியும் புரோடாக்டினியம்(V) புளோரைடை தயாரிக்க முடியும்.[2] பண்புகள்புரோடாக்டினியம்(V) புளோரைடு வெள்ளை நிறம் கொண்ட எளிதில் ஆவியாகும் ஒரு திண்மமாகும். இது அதிக நீருறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரில் ஓரளவு கரையும். ஐதரோபுளோரிக் அமிலத்திலும் இது கரையும். β-யுரேனியம் பெண்டாபுளோரைடு வகை நாற்கோணப் படிககட்டமைப்பை இச்சேர்மம் கொண்டுள்ளது. a = 1153 பைக்கோமீட்டர், c = 510 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் I42d (விண்வெளி குழு எண். 122) என்ற இடக்குழுவிலான படிகக்கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது. குவார்ட்சு மற்றும் பைரெக்சு ஆகியவை அதிக வெப்பநிலையில் புரோடாக்டினியம்(V) புளோரைடால் தாக்கப்படுகின்றன. ஓர் இருநீரேற்றாக இது நிறமற்ற, நீருறிஞ்சும் படிகத்திண்மப் பொருளாகும். இயற்கையில் இது மெழுகு போன்றது. நீரிலும் ஐதரோபுளோரிக் அமிலத்திலும் கரையும்.[1] பாசுபரசு முப்புளோரைடுடன் இது வினைபுரிந்தால் புரோடாக்டினியம்(IV) புளோரைடு உருவாகும்.[3] தாழ் வெப்பநிலையில் காற்றில், ஐதரசன் புளோரைடு அல்லது புளோரின் ஆகியவற்றால் இருநீரேற்றை நீரற்ற வடிவமாக மாற்ற முடியாது. அதற்கு பதிலாக, இருபுரோடாக்டினியம்(V) ஆக்சைடு ஆக்டாபுளோரைடு (Pa2OF8) உருவாகிறது. . 325 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலையில், இருபுரோடாக்டினியம்(V) ஆக்சைடு ஆக்டாபுளோரைடும் புரோட்டாக்டினியம்(V) புளோரைடும் கலவையாக உருவாகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia