புறநானூறு (துறைவிளக்கம்)புறநானூறு சங்ககால வரலாற்றை அறிய உதவும் பழமையான நூல். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் இன்ன திணையைச் சேர்ந்தது என்றும், இன்ன துறையைச் சேர்ந்தது என்றும் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுப்பு தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படவில்லை, புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணத்தையும் தழுவவில்லை. புறநானூற்றைத் தொகுத்தவர் அதில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். தொல்காப்பியர் அகத்திணையாகக் கொள்ளும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் புறநானூற்றுத் திணைக்குறிப்பு புறத்திணையில் வைத்துள்ளது. தொல்காப்பியரின் புறத்திணையில் இல்லாத பொதுவியல் என்னும் திணைக்குறிப்பு புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவற்றால் தொல்காப்பியப் பாகுபாடு புறநானூற்றுப் பாடல்களின் திணைக்குறிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. துறைக் குறிப்புக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பயன்படுத்தப்படவில்லை என்பதைப் புறநானூற்றில் உள்ள இயன்மொழி என்னும் துறையிலுள்ள பாடல்களால் அறியலாம். எனவே, புறநானூற்றுத் திணை, துறைக் குறிப்புகளுக்குப் பயன்பட்ட இலக்கண நூல் பன்னிரு படலம் எனக் கொள்ளக்கிடக்கிறது. புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளின் பெயர்களை அகர வரிசையில் இங்குக் காணலாம். அதனைச் சொடுக்கி அந்தந்தத் துறையின் விளக்கத்தையும் பெறலாம். துறைகள்
இவை தவிர துறை மறைந்துபோன பாடல்களும் உள்ளன. இவற்றையும் பார்க்கதொகுப்பு முன்னோடி
|
Portal di Ensiklopedia Dunia