ஐந்து அணிகள் பங்கேற்கும் இதன் முதல் பருவம் 2023 இல் மும்பை மற்றும் நவி மும்பையில் மார்ச் 4, 2023 முதல் நடைபெறும் [2][3]
வரலாறு
பெண்கள் இருபது20 சேலஞ்ச் எனும் பெயரில் ஒரு போட்டி கொண்ட தொடராக 2018ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் மூன்று அணிகள் கலந்து கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக 2019, 2020 மற்றும் 2022 இல் திட்டமிட்டனர்.
அக்டோபர் 2022 இல், பிசிசிஐ மார்ச், 2023இல் இந்தத் தொடரை ஐந்து அணிகள் கொண்ட தொடராக நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. [4][5] சனவரி 25, 2023இல் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இதற்கு பெண்கள் பிரீமியர் லீக் என்று பெயரிட்டது. [6]
சனவரி 30, 2023இல் மிதாலி ராஜ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசரகராக நியமிக்கப்பட்டார்.[11]ஜுலான் கோஸ்வாமி மும்பை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.[14]
சனவரி 2023 இல், வயாகாம் 18, போட்டிக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ம ஊடக ஒளிபரப்புக்கான உலகளாவிய ஊடக உரிமையைப் பெற்றதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இது ₹951 கோடி (ஐஅ$110 மில்லியன்) மதிப்புடையது [15] இதன் ஆரம்பப் பருவம் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ஜியோசினிமா செயலி ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும், இவை இரண்டும் வயாகாம் 18க்குச் சொந்தமானதாகும். [16]