நவி மும்பை
தானே கடற்கழியின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வீடுகளைக் கொண்ட நவி மும்பை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,20,547 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,10,060 மற்றும் 5,10,487 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 837 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,29,591 ஆகும். சராசரி எழுத்தறிவு 89.62 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 80.39 %, இசுலாமியர்கள் 8.68 %, பௌத்தர்கள் 6.23 %, சமணர்கள் 0.99 %, கிறித்துவர்கள் 2.35 %, சீக்கியர்கள் 1.01 % மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[2] நவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாசி, நெரூள் ஆகிய பகுதிகளாகும். நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்ட பின்னர் அண்மையிலுள்ள கார்கர் மற்றும் புது பன்வேல் பகுதிகளும் பெரும் குடியிருப்புக் கட்டமைப்பு வளர்ச்சியை காண்கின்றன. நவி மும்பையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக நெரூள் மற்றும் வாசி]]யில் வாழ்கின்றனர். பிறர் பேலாப்பூர், கார்கர், சான்படா, ஐரோலி, ஜூய்நகர் கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Wikivoyage:Maharashtra#Q61445|]]Maharashtra]] என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
}} |
Portal di Ensiklopedia Dunia