பெல்காம் எல்லைப் பிணக்கு![]() பெலகாவி எல்லைப் பிணக்கு அல்லது பெல்காம் எல்லைப் பிணக்கு (Belagavi border dispute or Belgaon border dispute)[1] கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம், கர்நாடகா-மகாராட்டிரம் மாநில எல்லையில் உள்ளது. பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பெரும்பான்மை மக்கள் பேசுகின்றனர். 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் பம்பாய் மாகாணத்தின் கீழ் பெல்காம் மாவட்டம் இருந்தது.[2] 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மராத்தி மொழி பெரும்பான்மையாக பேசும் பெல்காம் மாவட்டம், புதிதாக நிறுவப்பட்ட மைசூர் இராச்சியத்துடன் (தற்போது கர்நாடகா) இணைக்கப்பட்டது.[3][4] மகாராட்டிரா அரசின் கோரிக்கையின் படி, இந்திய அரசு பெல்காம் மாவட்ட உரிமைப் பிணக்கு குறித்து விசாரணை நடத்த 5 சூன் 1960 அன்று நீதியரசர் மகாஜன் தலைமையில் மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் சார்பில் நான்கு உறுப்பினர் குழுவை நியமித்தது. இருப்பினும் பெல்காம் மாவட்ட உரிமை/எல்லைப் பிரச்சனை குறித்து ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை.[5] கர்நாடகா அரசு தற்போது பெல்காம் மாவட்டம் உள்ளது உள்ளபடி இருக்க வற்புறுத்தியது. மேலும் பெல்காம் பகுதிகள் கர்நாடகத்தின் பகுதி என நிலைநாட்டுவதற்கு கர்நாடக அரசு பெல்காம் நகரத்தில் சுவர்ண சட்டமன்றக் கட்டிடத்தை 11 அக்டோபர் 2012 அன்று நிறுவியது.[6] மகாஜன் ஆணையம்பெல்காம் எல்லைப் பிரச்சனைக்கு முடிவு காண இந்திய அரசு 25 அக்டோபர் 1966 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாஜன் தலைமையில்[7] ஆணையத்தை நிறுவியது. மகாஜன் ஆணையம், பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராட்டிராவுடனும், கன்னடம் பேசும் கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்கலாம் என பரிந்துரை செய்தது. மேலும் பெல்காம் நகரம் மகாராட்டிரம் உரிமை கோருவதை ஆணையம் ஏற்கவில்லை.[8] மகாராட்டிரா அரசு பெல்காம் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் 814 கிராமங்களுக்கு உரிமை கோரியது. மேலும் மகாராட்டிரா மாநிலத்தில் கன்னடம் பேசும் 262 கிராமங்களை கர்நாடகாவுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தது. ஆனால் கர்நாடகா அரசு கன்னட மொழி பேசும் 516 கிராமங்களை மகாராட்டிர அரசிடமிருந்து கோரியது.[9] மகாஜன் ஆணையத்தின் அறிக்கைபெல்காம் நகரத்திற்கு மகாராட்டிரா அரசு உரிமை கோருவதற்கு ஆணையம் மறுத்தது.[9] ஆணயத்தின் கருத்துக்கள்:
மகாஜன் ஆணயத்தின் முக்கியப் பரிந்துரைகள்:
மகாஜன் ஆணையத்தின் பரிந்துரைகள் மகாராட்டிரம் மற்றும் கேரள அரசுகள் ஏற்க மறுத்தன. ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக மகாராட்டிரா அரசின் வாதங்கள்1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மராத்தி மொழி பேசும் அதிகம் பேசப்படும் பகுதிகள் அடிப்படையில் பெல்காம் எல்லைப் பிணக்கை தீர்க்கக் கோரியது. (அடைப்புக் குறிக்குள் கன்னடம் பேசுபவர்கள் %)
மகாஜன் அறிக்கையில் மராததி மொழி அதிகம் பேசும் பெல்காம் நகரத்தைச் சுற்றி, அனைத்துப் பகுதிகளிலும் கன்னடம் மொழி அதிகம் பேசும் பகுதிகள் உள்ளது என சுட்டிக்காட்டியது. பெல்காம் பகுதியில் மராத்தி மொழி கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதாகவும், மகாஜன் ஆணயத்தின் பரிந்துரைகள் பெல்காம் எல்லைப் பிணக்கிற்கு இறுதியானது அல்ல மகாராட்டிரா அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.[11] உச்ச நீதிமன்றத்தில்பெல்காம் நகரம் தமக்குரியது என மகாராட்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் 17 சனவரி 2004 அன்று வழக்கு தொடுத்தது. அதற்கு கர்நாடக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பிணக்க்கை நாடாளுமன்றம் மட்டுமே தலையிட்டு தீர்வு காணமுடியுமே தவிர நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது.[12] இதனையும் காண்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia