உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் நான்கு முறை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர். 1997, 2005, 2009 மற்றும் 2013 ஆண்டுகளில் கோப்பையை வென்று நடப்பு வாகையாளர்களாக உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே தேசிய அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது. [9]
பிரேசில் தேசிய கால்பந்து அணி உலக கால்பந்து எலோ தர வரிசையில் உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ளது.[5][10][11][12][13][14] பிபா தர வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளது.
நான்கு வெவ்வேறு கண்டங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு: ஐரோப்பாவில் சுவீடனில் 1958இலும் தென் அமெரிக்காவில் சிலியில் 1962இலும் வட அமெரிக்காவில் (இருமுறை) மெக்சிக்கோவில் 1970இலும் ஐக்கிய அமெரிக்காவில் 1994இலும் ஆசியாவில் கொரியா/சப்பானில் 2002இலும் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்த அலுவல்முறையான 35 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையை எசுப்பானியாவுடன் பகிர்கின்றனர்.[15][16][17] கால்பந்து இரசிகர்களிடையே பரவலான மேற்கோளுரை: "Os ingleses o inventaram, os brasileiros o aperfeiçoaram" ("ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர், பிரேசிலியர் கச்சிதப் படுத்தினர்").[18]
பிரேசில் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறது.
↑செப்டம்பர் 23, 1993 - நவம்பர் 19, 1993, ஏப்ரல் 19, 1994 - சூன் 14, 1994, சூலை 21, 1994 - மே 16, 2001, சூலை 3, 2002 - பெப்ரவரி 14, 2007, சூலை 18, 2007 - செப்டம்பர் 19, 2007, சூலை 1, 2009 - நவம்பர் 20, 2009, ஏப்ரல் 28, 2010 - சூலை 14, 2010
↑After 1988, the tournament has been restricted to squads with no more than 3 players over the age of 23, and these matches are not regarded as part of the national team's record, nor are caps awarded.
↑Together with France, Brazil is also the only team to have entered every World Cup and played at least in the qualifications (United States have also entered every World Cup, but once withdrew before the qualifications started).