மகதி பறவைகள் சரணாலயம்
மகதி பறவைகள் சரணாலயம் (Magadi Bird Sanctuary) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள கதக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிராகட்டி தாலுகாவிலுள்ள மகதி கிராமத்தின் ஏரியில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. [1] கதக் நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், சிராகட்டியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் இலட்சுமேசுவரத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் கதக்-பெங்களூர் சாலையில் மகதி கிராமம் உள்ளது. கர்நாடகாவில் பல்லுயிர் பெருக்கதிற்காக கிடைத்துள்ள முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். ![]() மகதி ஈரநிலங்களுக்கு குடிபெயரும் பறவைகளில் ஒன்று பட்டைத்தலை வாத்தாகும். [2][3] பொதுவாக பறவைகள் மீன்கள் உட்பட பிற நீர்வாழ் விலங்குகள் போன்றவற்றை சாப்பிடுகின்றன. ஆனால் புலம்பெயர்ந்து வருகைதரும் இவ்வகைப் பறவைகள் விவசாய விளைபொருட்களை சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. குளிர்காலத்தில் இவை பார்லி, அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை உண்பதால் அப்பயிர்களை பெரிதும் சேதப்படுத்துகின்றன. மகதி ஏரியை மீன்வளத் துறையும் மகதி கிராமப் பஞ்சாயத்தும் கர்நாடக அரசும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. கிராமப் பஞ்சாயத்து உட்பட உள்ளூர் நிறுவனங்கள் ஏரியையும் பறவைகள் சரணாலயதையும் மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. கர்நாடக பல்கலைகழகம் பறவைகள் ஆய்வுக்கு ஆதரவளிக்கிறது. இவற்றையும் காண்கமேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia