மகாகாளி மண்டலம்
![]() மகாகாளி மண்டலம் (Mahakali zone) (நேபாளி: महाकाली अञ्चलⓘ) தெற்காசியாவின் நேபாளத்தின் தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த இரண்டு மண்டலங்களில் ஒன்றாகும். மற்றொன்று சேத்தி மண்டலம் ஆகும். 6,205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்தில் நான்கு மாவட்டங்கள் உள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் கஞ்சன்பூர் மாவட்டத்தில் அமைந்த பீம்தத்தா நகரம் ஆகும். இங்கு பாயும் மகாகாளி ஆற்றின் பெயரால், இம்மண்டலத்திற்கு மகாகாளி மண்டலம் எனப் பெயராயிற்று. நிர்வாகப் பகுதிகள்தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ள மகாகாளி மண்டலத்தின் வெளித் தராய் சமவெளியில் கஞ்சன்பூர் மாவட்டம், உள் தராய் சமவெளியில் டடேல்துரா மாவட்டம், குன்றுப் பகுதியில் பைத்தடி மாவட்டம் மற்றும் இமயமலைப் பகுதியில் தார்ச்சுலா மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் உள்ளது. மகாகாளி ஆறு நேபாளம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது. புவியியல்மகாகாளி மண்டலத்தின் மேற்கிலும், தெற்கிலும் இந்தியா, கிழக்கில் சேத்தி மண்டலம், வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதி எலலையாக அமைந்துள்ளது. மகாகாளி மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளியும், நடுவில் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளும், வடக்கில் இமயமலைப் பகுதியும் உள்ளது. தட்ப வெப்பம்மகாகாளி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து நூற்றி ஐம்பத்து மீட்டருக்கும் கீழான உயரத்திலிருந்து, ஐயாயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என நான்கு கால நிலைகளில் காணப்படுகிறது. [1] மக்கள் தொகையியல்6,205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 9,77,514 ஆகும்.[2]இம்மண்டலத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்தில் எண்பது விழுக்காட்டினர் குமாவ்னி மொழி பேசுகின்றனர். மேலும் குமாவ்னி மொழியின் வட்டார வழக்கான டோடியாளி மொழியை பைத்தடி மற்றும் டடேல்துரா மாவட்டங்களில் பேசப்படுகிறது. முக்கிய நகரங்கள்இம்மண்டலத்தின் முக்கிய நகரங்கள் கஞ்சன்பூர் மாவட்டத்தின் பீம்தத்தா, ராஜ்காட், அமர்கத்தி, தசரத்சந்த் பதான் மற்றும் தார்ச்சுலா ஆகும். காட்டுயிர்க் காப்பகம்மகாகாளி மண்டலத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்தி தராய் மற்றும் மலைப்பாங்கான பகுதியில், சுக்லா பாண்டா காட்டுயிர் காப்பகம் 305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இக்காப்பகத்தைச் சுற்றிலும் 243.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடைப்பகுதி (buffer zone) உள்ளது.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia