தார்ச்சுலா மாவட்டம்![]() தார்ச்சுலா மாவட்டம் (Darchula District) (நேபாளி: दार्चुला जिल्ला ⓘ, தூர மேற்கு நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 7-இல் அமைந்த ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தார்ச்சுலா நகரம் ஆகும். மக்கள் தொகையியல்2011-ஆம் மக்கள் தொகை கணக்கின் படி, தார்ச்சுலா மாவட்டம் 2,322 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,33,274 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.[1] மக்கள் தொகையில் ஆண்கள் 63,609, பெண்கள் 69,855 ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு, 91 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 57 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது.[1] தோடியாளி, குமாவானி, ருங் மற்றும் நேபாளி மொழிகள் இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. 58% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். மக்களில் 63.55% சத்திரியர்களும், 17.15% அந்தணர்களும், 4.01% தாக்கூரிகளும், தலித் மற்றும் பிறர் 15.39% ஆக உள்ளனர். பெரும்பான்மையான சமயம் இந்து சமயமாக உள்ளது. பௌத்த சமயத்தை பின்பற்றும் மக்களும் உள்ளனர்.[1] புவியியல்![]() தார்ச்சுலா மாவட்டம், நேபாளத்தின் தூர மேற்கில், இமயமலையில் 300 மீட்டர் உயரம் முதல் 5,000 மீட்டர் முடிய பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் மேற்கில் இந்தியாவும், வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும் எல்லைகளாக உள்ளது.[2] பொருளாதாரம்தார்ச்சுலா மாவட்டம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். தனி மனிதனின் ஆயுட்காலம் 52 வயது என 1996-இல் கணிக்கப்பட்டது. மக்கள் தொகையில் 90 விழுக்காடு மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ளனர். சுற்றுலாநேபாளம் வழியாக கயிலை மலை - மானசரோவர் யாத்திரை செல்பவர்களுக்கு தார்ச்சுலா மாவட்டத்தின் அபி நம்பா காட்டுயிர் காப்பகம் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. மலை ஏற்றப் பயிற்சி வீரர்களுக்கு தார்சூலா முக்கிய மையமாக விளங்குகிறது. தட்ப வெப்பம்பெரு மழையும், கடுங்குளிரும் கொண்ட மாவட்டமிது. தார்ச்சுலா மாவட்டத்தின் தெற்கில் மித வெப்பமும், நடுப் பகுதியில் குளிரும், வடக்குப் பகுதியில் கடுங்குளிரும் கொண்டது. சராசரி வெப்பம் 18.6 °C; குறைந்த பட்ச வெப்பம் 7.7 °C ஆகும். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக் காலம் ஆகும். மாவட்டத்தின் சராசரி மழைப் பொழிவு 2129 மில்லி மீட்டர் ஆகும் 1800 மீட்டர் முதல் 6500 மீட்டர் உயரம் கொண்ட இமய மலைப் பகுதியில் தார்ச்சுலா மாவட்டம் அமைந்துள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia