மகாதேவ் கோவிந்து ரனதேமகாதேவ் கோவிந்த் ரனதே (Mahadev Govind Ranade) (பிறப்பு: 1842 சனவரி 18 - இறப்பு: 1901 சனவரி 16) இவர் ஓர் இந்திய அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியும், நீதிபதியும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [1] மேலும் பம்பாய் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராகவும், மையத்தில் நிதிக் குழுவின் உறுப்பினராகவும் மற்றும் மகாராட்டிராவின் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி என பல பதவிகளைக் கொண்டிருந்தார். [2] நன்கு அறியப்பட்ட பொது நபராக, அமைதியான மற்றும் பொறுமையான நம்பிக்கையாளராக இவரது ஆளுமை பிரிட்டனுடனான பரிவர்த்தனைகள் மற்றும் இந்தியாவில் சீர்திருத்தங்கள் குறித்த இவரது அணுகுமுறையை ஈர்த்தது. இவர் பிரார்த்தனா சமாஜத்தை நிறுவ உதவினார். மேலும் சமூக மற்றும் மத சீர்திருத்தத்தின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்துபிரகாஷ் என்ற மும்பை ஆங்கிலோ-மராத்தி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். இவருக்கு ராவ் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. [3] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்![]() மகாதேவ் கோவிந்த் ரனதே நாசிக் மாவட்டத்தில் ஒரு வட்ட் நகரமான நிபாட் என்னுமிடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். [4] கோலாப்பூரில் உள்ள மராத்தி பள்ளியில் படித்தஇவர் பின்னர் ஆங்கில நடுத்தர பள்ளிக்கு மாற்றப்பட்டார். 14 வயதில், மும்பையின் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படிக்கச் சென்றார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவர்களைச் சேர்ந்தவர். இவர் 1862 இல் இளங்கலை பட்டம் பெற்றார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப் பட்டம் பெற்றார். சமூகச் செயல்பாடுரனதே ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இவரது நடவடிக்கைகள் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் காலனித்துவ அரசால் ஆழமாக செல்வக்குப்பெற்றன. இவரது நடவடிக்கைகள் மத சீர்திருத்தம் முதல் பொதுக் கல்வி வரை இந்திய குடும்பத்திற்குள் சீர்திருத்தம் வரை இருந்தன. மேலும் ஒவ்வொரு பகுதியிலும், இந்திய வழக்கத்திலும் பாரம்பரியத்திலும் சிறிதளவு நல்லொழுக்கங்களைக் காணவும், இந்த விஷயத்தை மீண்டும் வடிவமைக்க பாடுபடுவதற்கும் இவர் முயன்றார். இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் பணியை "மனிதமயமாக்குதல், சமப்படுத்துதல் மற்றும் ஆன்மீகமயமாக்குதல்" என்று ஐவரே சுருக்கமாகக் கூறினார். தற்போதுள்ள இந்திய சமுதாயத்தில் இந்த குணங்கள் இல்லை என்பதன் உட்பொருள். [5] தனிப்பட்ட வாழ்க்கைஇவரது முதல் மனைவி இறந்தபோது ரனதேவிற்கு 30 வயது ஆகியிருந்தது. இவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால் இவர் மறுபடியும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவரது குடும்பத்தினர் விரும்பினர். 1861 ஆம் ஆண்டு வரை 'விதவை திருமண சங்கத்தை' இணைந்து நிறுவிய ரனதே, நிச்சயமாக தனது சொந்த பிரசங்கங்களின்படி செயல்பட்டு ஒரு விதவையை திருமணம் செய்து கொள்வார் என்று அவரது சீர்திருத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் எதிர்பார்த்தனர். இது நடக்கவில்லை. ரனதே தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு இணங்கி, இரமாபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய இரண்டாவது திருமணமும் குழந்தையற்றதாகவே இருந்தது. [6] இந்த இணை முற்றிலும் இணக்கமான மற்றும் வழக்கமான திருமணத்தை கொண்டிருந்தது. ரனதே தனது மனைவி உயர் கல்வியைப் பெறுவதை உறுதிசெய்தார். அதைப் பற்றி அவர் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், அந்தக் காலத்து அனைத்து இந்தியப் பெண்களையும் போலவே, இரமாபாய் தனது கணவரின் விருப்பங்களுக்கு இணங்க, தனது புதிய வாழ்க்கையில் வளர்ந்தார். உண்மையில், ரனதே இறந்த பிறகு, இரமாபாய் தனது கணவர் ஆரம்பித்த சமூக மற்றும் கல்வி சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia