மரக்கரை
மரக்கரை (Marakkara) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் திரூர் வட்டத்தில் உள்ள குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். [1] காடாம்புழா கோயில்மரக்கரை ஊராட்சிக்குள் பிரசித்தி பெற்ற காடாம்புழா தேவி கோயில் உள்ளது. காடம்புழா தேவி கோயில் என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழாவில் உள்ள ஒரு இந்து கோயில் மற்றும் புனித யாத்திரை தலமாகும். இந்தக் கோவிலின் முக்கிய தெய்வம் பார்வதி/துர்கை ஆவார். இக்கோயிலில் அம்மன் சிலை இல்லை, குழியை அம்மனாக வழிபடப்படுகிறார். விநாயகப் பெருமானின் பிரசன்னம் தேவியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் சாஸ்தா மற்றும் நாக தெய்வங்களுக்கான துணை சிற்றாலயங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் 'மாதம்பியர்காவு' என்ற தனி சிவன் கோவில் உள்ளது. இந்த இரண்டு கோவில்களும் மலபார் தேவசம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. போக்குவரத்துமரக்கரை கிராமம் கோட்டக்கல் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 தானூர் வழியாக செல்கிறது. அது வடக்கில் கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது. மக்கள்தொகையியல்2011[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மரக்கரையின் மக்கள் தொகை 40404 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 18999 என்றும், பெண்கள் எண்ணிக்கை 21405 என்றும் உள்ளது.[1] நிர்வாகம்மரக்கரை ஒரு கிராம ஊராட்சி ஆகும். ஊராட்சி 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள்
வார்டுகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia