குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம்
குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் (Kuttippuram Block Panchayat) என்பது இந்தியாவின் கேரளத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குட்டிப்புரத்தைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதியை நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாக அமைப்பாகும். [3] இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி நிறுவப்பட்ட 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] 1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக 2020 ஆம் ஆண்டு முதல் வசீமா வெலேரி உள்ளார். [5] [6] குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ளது. அவை - கோட்டக்கல் சட்டமன்றத் தொகுதி மற்றும் திரூர் சட்டமன்றத் தொகுதி ஆகும். இவை இரண்டும் பொன்னானி மக்களவைத் தொகுதிக்குள் உள்ளன. ஊராட்சி ஒன்றியமானது ஒன்றியம் தலைவரின் தலைமையிலான மாமன்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாமன்றம் 155.83 கிமீ 2 , பரப்பளவிலான குட்டிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வகிக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 229,468 மக்கள் வசிக்கின்றனர். [7] [8] வரலாறுபல்வந்த் ராய் மேத்தா கமிட்டி மற்றும் இ. எம். எஸ். நம்பூதிரிபாடு தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, சமூக மேம்பாட்டில் மக்களின் பங்களிப்பை கூடுதலாக உறுதி செய்யவும், கிராம அளவில் திட்டமிட்ட வளர்ச்சியை வடிவமைக்கவும், ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்றியது. அதிகாரப் பரவலாக்கத்தை அமல்படுத்தியது. [5] அதற்காக கேரள உள்ளாட்சி அமைப்புச் சட்டம், 1960 உருவாக்கப்பட்டது. அச்சட்டம் கேரளத்தில் 1962 சனவரி முதல் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. [5] இந்தச் சட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கி 922 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டன. [5] இந்த ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் 1964 சனவரி முதல் நாள் அதிகாரத்துக்கு வந்தனர். [5] திரூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் ஒன்றியத்தின் ( ஃபிர்கா ) தலைமையகம் குட்டிப்புரத்தில் இருந்தது. [9] முந்தைய ஃபிர்காக்கள் ஊராட்சி ஒன்றியங்களாக மறுவடிவமைக்கப்பட்டு, கிராம ஊராட்சிகளின் தொகுதி அளவிலான நிர்வாகத்திற்கான பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனவே குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் 1 சனவரி 1962 இல் நடைமுறைக்கு வந்தது [5] [6] இந்த ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்ட போது, இதில் குட்டிப்புரம், வாலாஞ்சேரி, பருதூர், இரிம்பிளியம், எடையூர், மரக்கரை, ஆதவநாடு ஆகிய ஏழு கிராம ஊராட்சிகள் அடங்கி இருந்தன. [6] பின்னர் 16 சூன் 1969 இல், பருதூர் கிராமம் பாலக்காடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது, [10] மேலும் 2015 இல், வளஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2015 இல் ஏற்பட்ட மற்ற அதிகார வரம்பு மாற்றத்தினால் கல்பகஞ்சேரி கிராம ஊராட்சியை ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது. [7] [8] கட்டமைப்புகுட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் பின்வரும் கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது: [8] [3]
வாலாஞ்சேரி நகராட்சியானது குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியத்தால் அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் சூழ்ந்துள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia