சுபலேகா சுதாகர்
சுபலேகா சுதாகர் (பிறப்பு சூரவாஜலா சுதாகர் ; 19 நவம்பர் 1960) என்பவர் ஓர் இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகராவார். இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார். இவர் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களான சித்தி, அண்ணி, கோலங்கள், தென்றல் போன்றவற்றில் நடித்துள்ளார்.[1][2] இவர் மமதல கோவிலா தொடரில் நடித்ததற்காக நந்தி விருதைப் பெற்றார்.[3] தென்றல் தொடரில் துளசியின் தந்தையும், ஊனமுற்றவருமான முத்துமாணிக்கமாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் வென்றார்.[4][5] தொழில்சுபலேகா சுதாகர் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே. விஸ்வநாத்தின் "சுபலேகா" படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் அறிமுகமானதால் இவருக்கு "சுபலேகா" சுதாகர் என்ற திரைப் பெயர் கிடைத்தது. இவர் நகைச்சுவை, துணை நடிகர் ஆகிய பாத்திரங்களுக்காக புகழ்பெற்றவர்.[6] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் 1989இல் திரைப்பட பின்னணி பாடகியான எஸ். பி. சைலஜாவை[7] திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு சிறீகர் என்ற மகன் 1991இல் பிறந்தார். தொலைக்காட்சி
நடித்த திரைப்படங்கள்தமிழ்
இந்தி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia