டெல்லி கணேஷ் (Delhi Ganesh) என்ற திரைப் பெயரால் அறியப்படும் கார்ப்போரல் எம். கணேசன் (Corporal M. Ganesan ; 1 ஆகத்து 1944 - 9 நவம்பர் 2024) தமிழ் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர்.[1] கமலஹாசன் உடன் இணைந்து இவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். இவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. இவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தக்சிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். இவருக்கு டெல்லி கணேஷ் என்ற மேடைப் பெயர் கே. பாலசந்தரால் வழங்கப்பட்டது.[2] பட்டினப்பிரவேசம் (1976) திரைப்படத்தின் மூலம் கே. பாலசந்தரால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தபட்டார்.
துவக்க கால வாழ்க்கை
தமிழ்நாட்டின் இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூரில் 1 ஆகத்து 1944 அன்று கணேசன் என்ற பெயரில் பிறந்தார்.[3][4] இந்த ஊர் இவரது தாயார் பிச்சுவின் சொந்த ஊராகும். இருப்பினும், கணேசனின் பள்ளி ஆசிரியரான இவரது தந்தை மகாதேவனின் சொந்த ஊரான வல்லநாட்டில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) வளர்ந்தார். அங்கே உள்ள துக்கப்பளியில் பயின்றார்.[5] இவருக்கு ஒரு அக்காளும் ஒரு தம்பியும் இருந்தனர்.[4]
தொழில்
எஸ்எஸ்எல்சி முடித்த கணேசன் மதுரை சென்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இந்த நேரத்தில், இவர் ஒரு கார்ப்போரலாக (Corporal) இருந்தார்.[6] அச்சமயத்தில் நிகழ்ந்த 1965 மற்றும் 1971 இந்திய-பாகிஸ்தான் போர்களின் போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார்.[7][8][9] இந்த காலகட்டத்தில், தில்லியைச் சேர்ந்த நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபா நடத்திய நாடகங்களில் நடித்தார்.[5][10][11][12]
இந்திய விமானப்படையிலிருந்து விலகிய பிறகு, காத்தாடி ராமமூர்த்தியின் நாடகக் குழுவில் இணைந்தார். இவர் அங்கு பணிபுரிந்த போது, டௌரி கல்யாண வைபோகமே என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததபோது தன் வாழ்வில் திருப்புமுனையை அடைந்தார். குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது. இறுதியில் கணேஷை அவர் இயக்கிய பட்டினப்பிரவேசத்தில் நடிக்க வைத்தார். மேலும் பாலச்சந்தரின் இயக்கத்தில் அந்த பாத்திரத்தில் கணேஷ் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.[9] சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் தட்டச்சராக சிறிது காலம் பணிபுரிந்தார்.[13][14]
1981 ஆம் ஆண்டு எங்கம்மா மகராணி படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களாக துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் இவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.[15]
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகராவார். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.
பெற்ற விருதுகள்
- 1979 - பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான" விருது
- 1993 - 1994 - தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது"
டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்களில்
இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்
ஆண்டு
|
திரைப்படம்
|
கதாபாத்திரம்
|
1993
|
துருவம்
|
இராமய்யன்
|
தேவாசுரம்
|
பணிக்கர்
|
1994
|
தி சிட்டி
|
கமிசனர் முத்துலிங்கம் ஐபிஎஸ்
|
1996
|
காலப்பனி
|
பாண்டியன்
|
2005
|
கொச்சி ராஜாவு
|
சத்தியமூர்த்தி
|
2006
|
கீர்த்தி சக்கரா
|
ஜெயின் தந்தை
|
2010
|
போக்கிரி ராஜா
|
வேலு
|
2014
|
பெருச்சாழி
|
தமிழ்நாட்டுப் பிரதிநிதி
|
2015
|
லாவெண்டர்
|
ஐசாவின் தாத்தா
|
2019
|
மனோகரம்
|
அலி பாய்
|
பிற மொழித் திரைப்படங்களில்
இவர் நடித்த பிற மொழித் திரைப்படங்கள்
ஆண்டு
|
திரைப்படம்
|
கதாபாத்திரம்
|
மொழி
|
1991
|
ஜெய்த்ர யாத்ரா
|
|
தெலுங்கு
|
2005
|
டஸ்
|
சூர்யகாந்த் ரைடு
|
இந்தி
|
2006
|
நாயுடும்மா
|
|
தெலுங்கு
|
2009
|
புண்ணமி நாகு
|
பூசாரி
|
அஜப் பிரேம் கி கசப் ககானி
|
கோயில் பூசாரி
|
இந்தி
|
2013
|
சென்னை எக்ஸ்பிரஸ்
|
கிராமத்தவர்
|
பின்னணிக் குரல் கலைஞராக
தொலைக்காட்சித் தொடர்கள்
வலைத்தொடர்
இவர் நடித்த வலைத்தொடர்கள்
ஆண்டு
|
வலைத்தொடர்
|
ஒளிப்பரப்பிய தளம்
|
2018 |
அமெரிக்கா மாப்பிள்ளை |
ஜீ5
|
2021 |
நவரசா |
நெற்ஃபிளிக்சு
|
பின்னணிக் குரல்
தொலைக்காட்சித் தொடருக்கு பின்னணிக்குரல்
ஆண்டு
|
தலைப்பு
|
நடிகர்
|
தொலைக்காட்சி
|
1987 |
மால்குடி டேஸ் |
கிரீஷ் கர்னாட் |
தூர்தர்சன்
|
இறப்பு
டெல்லி கணேஷ் முதுமை, பிற மருத்துவச் சிக்கல்கள் காரணமாக சென்னையில் 2024 நவம்பர் 9 அன்று இரவு 11:30 மணியளவில் காலமானார்.[16][17][18]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்