மலாக்கா ஆறு
மலாக்கா ஆறு; (மலாய்: Sungai Melaka; ஆங்கிலம்: Malacca River) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மையப் பகுதி வழியாகச் சென்று மலாக்கா நீரிணையில் கலக்கும் ஆறு ஆகும். 15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்து ஆளுமையின் உச்சக்கட்டத்தின் போது, இந்த ஆறு ஒரு முக்கிய வர்த்தகப் போக்குவரத்துப் பாதையாக இருந்தது. மலாக்கா மாநிலத்தில் உள்ள ஆறுகளில், இந்த ஆறு மிக முக்கியமான ஆறாகக் கருதப் படுகிறது. பொதுநெகிரி செம்பிலான், தம்பின் மாவட்டம், தித்திவாங்சா மலைத்தொடரின் தெற்கு முனை அடிவாரத்தில் உள்ள கம்போங் ஓரெக் எனும் கிராமத்தில் மலாக்கா ஆற்றின் தொடக்கம் அமைகிறது. உண்மையில் மலாக்கா ஆற்றின் மூலம் தம்பின் ஆறு ஆகும். தெற்கே பாயும் தம்பின் ஆறு, (கூட்டரசு சாலை சீரமைப்புத் திட்டங்கள்![]() மலாக்கா ஆற்றைப் புதுப்பிக்கவும், புத்துயிர் கொடுக்கவும் $ 100 மில்லியன் (RM 350 மில்லியன்) உள்கட்டமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆறு ஒரு வரலாற்று நகரமான மலாக்காவிற்கு மையமாக உள்ளதால் அத்தகைய சீரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சீரமைப்புத் திட்டங்களில் பல கட்டமைப்புகள் இணைக்கப்பட்டன. கடல் அலைகள் தடுப்பு கட்டுமானம்; கட்டிடங்கள்; பாலங்களை மறுசீரமைத்தல்; அகழ்வாராய்ச்சி; ஆற்றின் நடைபாதைகளுடன் கற்காரை கரைகளை உருவாக்குதல்; ஆகிய கட்டமைப்புகள் அடங்கும்.[1] அந்த வகையில், நில மீட்பு திட்டங்கள் மூலமாக மலாககா ஆற்றின் முகத்துவாரம், மலாக்கா நீரிணையில் மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளன.[2] சுற்றுலாஉலகப் பாரம்பரியக் களமான மலாக்கா மாநகரத்தின் நடுவில் மலாக்கா ஆறு பாய்ந்து செல்கிறது. அந்த வகையில் தற்போது, மலாக்கா ஆற்றின் முகத்துவாரப் பகுதியானது மலாக்கா ஆற்றுச் சவாரி எனும் ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டு உள்ளது. மலாக்கா நகரத்தின் கிழக்கில் உள்ள பெங்காலான் ராமா புறநகர்ப் பகுதியில் இருந்து; மலாக்கா நீரிணையின் கடற்கரைக்கு அருகில் உள்ள பந்தாய் ஈலிர் வரை; 45 நிமிட நேரச் சுற்றுப் பயணத்தைச் சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்கிறார்கள்.[3][4] மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia