தம்பின் மாவட்டம்
தம்பின் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Tampin; ஆங்கிலம்: Tampin District; சீனம்: 淡边县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். தம்பின் மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம்.[2] கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. பொதுநெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது. அதன் விளைவாக, ஜூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது. நிர்வாகப் பகுதிகள்தம்பின் மாவட்டக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதிகள்:-
தம்பின் முக்கிம்கள்தம்பின் மாவட்டத்தில் மாவட்டத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.[3]
தம்பின் தேர்தல் முடிவுகள்
மலேசிய மக்களவையில் தம்பின் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
மாநிலச் சட்டமன்றம்தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2023-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
தம்பின் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்மலேசியா; நெகிரி செம்பிலான்; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia