மலேசிய தர நிர்ணய அமைவனம்
மலேசிய தர நிர்ணய அமைவனம் (மலாய்: Agensi Kelayakan Malaysia (AKM); ஆங்கிலம்: Malaysian Qualifications Agency) (MQA); என்பது மலேசியத் தகுதிச் சட்டம் 2007-இன் கீழ் மலேசியாவில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வமான தர நிர்ணய அமைப்பாகும். மலேசியாவின் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இடைநிலைக் கல்வி; மற்றும் உயர்நிலைக் கல்வியை அங்கீகரிக்கும் அமைப்பாக மலேசிய தர நிர்ணய அமைவனம் உருவாக்கப்பட்டது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்வித் தகுதிகளுக்கான சான்றிதழ்களை அங்கீகரிக்கும் கடப்பாடும் மலேசிய தர நிர்ணய அமைவனத்திற்கு உண்டு. இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் சிலாங்கூர் சைபர்ஜெயாவில் உள்ளது.[1] பங்குமலேசிய உயர்கல்வியின் தர உறுதிப்பாட்டின் அடிப்படையில், மலேசியத் தகுதிக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதே மலேசிய தர நிர்ணய அமைவனத்தின் முக்கியப் பங்கு ஆகும். மற்றும் தேசியக் கல்வித் தகுதிகளுக்கான அளவுகோல்கள் மற்றும் தரநிலைகளை நிர்ணயம் செய்வதும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் முக்கியமாகக் கருதப்படுகிறது. [2] மலேசிய தர நிர்ணய அமைப்பின் செயல்பாடுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia