மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை
மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); என்பது மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் (Ministry of Rural and Regional Development) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும். இந்தத் துறை 1954-ஆம் ஆண்டில் மலேசியப் பழங்குடியினர் விவகாரங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்டது.[3] பொதுமலேசியப் பழங்குடியினர் (மலாய்: Orang Asli), தீபகற்ப மலேசியாவின் பூர்வீகக் குடியினர் ஆகும். பொதுவாக, இவர்களை ஒராங் அசுலி என்று அழைக்கின்றனர். மலேசியாவில் இந்தப் பழங்குடியினர் 18 பிரிவுகளாக உள்ளனர். இவர்களில் செமாங் அல்லது நெகிரிட்டோ இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். செனோய் இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர். புரோட்டோ மலாய் இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கோம்பாக் நகரில் ஒராங் அசுலி பழங்குடியினரின் அரும்பொருள் காட்சியகம் அமைந்து உள்ளது. பழங்குடியினர் சட்ட திட்டங்கள்மலேசியப் பழங்குடியினர் சார்ந்த சட்டங்கள்:
1954-ஆம் ஆண்டில் பழங்குடி மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டு நிலம் வழங்குவதற்கு வகை செய்யப்பட்டது. எனினும் பழங்குடி மக்களை அவர்களின் சிறப்பு நிலங்களில் இருந்து வெளியேற்றவும்; பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உரிமை உண்டு என்று 1954-ஆம் ஆண்டு பழங்குடி மக்கள் பாதுகாப்புச் சட்டம் வரையறுத்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia