மலேசிய திறன் மேம்பாட்டு துறை
மலேசிய திறன் மேம்பாட்டு துறை (மலாய்: Jabatan Pembangunan Kemahiran Malaysia (JPK); ஆங்கிலம்: Department of Skills Development Malaysia) (DSD); என்பது மலேசிய மனிதவள அமைச்சின் (Ministry of Human Resources Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[3] மலேசிய குடிமக்களுக்கான பயிற்சி திறன்களை ஒருங்கிணைப்பதற்கும்; பயிற்சி திறன்களை ஒரே இலக்கில் கட்டுப்படுத்துவதற்கும் (Co-ordination and Control of Training Skills for Malaysian Citizens); வேலை நிபுணத்துவம் மற்றும் திறமைகளை மதிப்பிடுவதற்கான தரநிலைகளை ஆராய்ந்து உருவாக்குவதற்கும் (Researches and Develops Standards to Evaluate Job Expertise and Competency); 1989 மே 2-ஆம் தேதி மலேசிய திறன் மேம்பாட்டு துறை தோற்றுவிக்கப்பட்டது.[2] பொதுதிறன் மேம்பாட்டுத் துறை (Department of Skills Development), முன்பு தேசிய தொழிற்பயிற்சி மன்றம் (மலாய்: Majlis Latihan Vokasional Kebangsaan (MLVK); ஆங்கிலம்: National Vocational Training Council) என அழைக்கப்பட்டது; இது மனிதவள அமைச்சின் கீழ் உள்ள ஒரு துறையாகும். 1989 மே 2-இல் நிறுவப்பட்ட தேசிய பயிற்சி மற்றும் சான்றிதழ் கைவினை வாரியத்தை (மலாய்: Lembaga Latihan Perindustrian dan Persijilan Ketukangan Kebangsaan (LLPPKK); ஆங்கிலம்: National Training and Certification Craft Board) மறுசீரமைப்பு செய்ததன் மூலம் திறன் மேம்பாட்டுத் துறை உருவானது. 1971-ஆம் ஆண்டு தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006 (சட்டம் 652); 2006 செப்டம்பர் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகு Majlis Latihan Vokasional Kebangsaan (MLVK) என்ற பெயர் Jabatan Pembangunan Kemahiran Malaysia (JPK) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][4] அமைப்புஇந்தத் திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைமை இயக்குநர் ஒருவர் தலைமை தாங்குகிறார்; துணை தலைமை இயக்குநர் ஒருவர்; மற்றும் சட்ட ஆலோசகர் ஒருவர் உதவி செய்கிறார்கள். திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் மேலும் 14 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஓர் இயக்குனரால் வழிநடத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மையங்கள்திறன் மேம்பாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் படிப்பை முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு மலேசிய திறன்கள் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. அங்கீகாரம் பெற்ற மையங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டு உள்ளன:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia