மலேசிய மேலவை
மேலவை (Senate) அல்லது டேவான் நெகாரா (Dewan Negara, மலாய் மொழியில் தேசியப் பேரவை) என்பது ஈரவைகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மற்றையது டேவான் ராக்யாட் அல்லது கீழவை அல்லது மக்களவை என அழைக்கப்படுகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில், மாநிலம் ஒவ்வொன்றிலும் இருந்தும் இருவராக 26 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களை விட 44 பேர் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப்படுகின்றனர். இரு அவைகளும் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகின்றன. கீழவையான மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனாலும், சட்டமூலம் ஒன்று மேலவையினால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், அச்சட்டமூலம் ஓராண்டுக்குப் பின்னரே மன்னருக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போதைய நிலை2015 சூலை 29 இன் படி அரசியல் கட்சிகள் வாரியாக மேலவை உறுப்பினர்கள் வருமாறு::[1][2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia