வரலாற்று அடிப்படையில், 1957-ஆம் ஆண்டில், பிரித்தானியர்களிடம் இருந்து மலேசிய விடுதலை பெற்றது. அதன் பின்னர்1963-ஆம் ஆண்டில் மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் எந்த ஒரு மாநிலமும் நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கவில்லை.
1863-ஆம் ஆண்டு முதல், சரவாக் மாநிலம் மட்டும் அதன் நிர்வாகப் பணிகளுக்காக சொந்த மாநிலச் சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது. மலாயா, சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சட்டம் இயற்றும் சட்டமன்றங்களை உருவாக்குவதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இருப்பினும், அவை உச்சக்கட்ட சட்டங்களை உருவாக்கும் தகுதிகளைப் பெற்று இருக்கவில்லை.[1]
மலாயாவின் அரசியலமைப்பைரீட் ஆணையம் வரைவு செய்தது. ரீட் ஆணையம் (Reid Commission) என்பது பிரித்தானியரிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், மலாயா அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நடுநிலையான ஆணையமாகும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பின்னர், 1957 ஆகஸ்டு 31-ஆம் தேதி பிரித்தானியரிடம் இருந்து மலாயா விடுதலை பெற்றது.
மலாயா ஆட்சி முறை பிரித்தானிய முறையைப் பின்பற்றியது. இந்த முறை ஓர் ஈரவை நாடாளுமன்றம் ஆகும். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஓர் அவை; அதற்கு மக்களவை என்று பெயர். மற்ற ஓர் அவையான மேலவைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. மேலவையின் சில உறுப்பினர்கள் நாட்டின் பேரரசரால் நியமிக்கப்படுகிறார்கள்.
மலாயாவின் முதல் நாடாளுமன்றக் கூட்டம், 1959 செப்டம்பர் மாதம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தன்னார்வப் படையின் தலைமையக கட்டிடத்தில் (Federated Malay States Volunteer Force) கூடியது. அந்தக் கட்டிடம் அப்போது மேக்சுவெல் சாலையில் ஒரு குன்றின் உச்சியில் இருந்தது. தற்போது அந்தச் சாலை துன் இசுமாயில் சாலை என்று அழைக்கப்படுகிறது. மேலவை கீழே இருந்த தரை தளத்தின் மண்டபத்தில் கூடியது. மக்களவை முதல் தளத்தில் உள்ள மண்டபத்தில் கூடியது.
மலேசியாவின் முதல் பிரதமர்துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது.
18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டன.
↑The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014
↑"Dashboard SPR". PILIHAN RAYA UMUM KE-15. Suruhanjaya Pilihan Raya Malaysia. Archived from the original on 20 September 2020. Retrieved 5 November 2022.