மாறஞ்சேரி
மாறஞ்சேரி (Maranchery) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். நிலவியல்இந்த சிற்றூர் ஒருபுறம் நரணிப்புழா ஆற்றுடன் தொடர்புடைய பையம் காயலையும், மறுபுறம் வெளியங்கோடு சிற்றூரையும் எல்லைகளாக கொண்டுள்ளது. 2001 தற்காலிக புள்ளி விவரப்படி, மாரஞ்சேரியின் பரப்பளவு 20.47 கி.மீ.² ஆகும்.[1] குண்டுகடவு புறங்கு தாமலசேரி, மாரடி, வடமுக்கு, பாணம்பாடு, பரிச்சகம் மற்றும் முக்காலை ஆகிய கிராமங்கள் மாறஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டவை. வரலாறுமாறஞ்சேரி முன்பு ஆழ்வாஞ்சேரி தம்பிரக்களின் அமைவிடமாக இருந்தது, தற்போது ஆதவநாட்டில் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்கவர்கள்
பொருளாதாரம்இது தண்ணீர் பந்தல் மற்றும் மாறஞ்சேரி சந்தைக்கு பிரபலமான வணிக மையமாகும். அரசியல்மாறஞ்சேரி ஊராட்சியின் முதல் தலைவராக மரக்காரக்காயில் மொய்டுட்டி (கூலத்) இருந்தார். மக்கள்தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மாறஞ்சேரியின் மக்கள் தொகை 35,011 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 16,041 என்றும், பெண்களின் எண்ணிக்கை 18,970 என்றும் உள்ளது.[1] பண்பாடுமாறஞ்சேரியின் பண்பாடு பெரிதும் முசுலீம் மரபுகளின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளதை அது காட்டுகிறது. டஃப் முட்டு, கோல்கலி, அரவணமுத்து ஆகியவை பிரபலமான நாட்டுப்புற/பண்பாட்டுக் கலைகளாகும். கோடஞ்சேரி ஜும்ஆ பள்ளிவாசல் இங்கு உள்ள பழமையான பள்ளிவாசலாகும். இது மாறஞ்சேரியின் முக்கிய அடையாளமாகும். பள்ளிவாசலுக்கு அருகில் பல நூலகங்கள் உள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் அரபி-மலையாளத்தில் உள்ளன, இது அராபி எழுத்துகளில் எழுதப்பட்ட மலையாள மொழி நூல்களாகும். மக்கள் மாலை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் கூடுகிறனர். அதைத் தொடர்ந்து சமூக மற்றும் பண்பாட்டு சிக்கல்கள் குறித்து விவாதிக்கின்றனர். மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் வணிக மற்றும் குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இந்து சிறுபான்மையினர் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் தங்கள் பாரம்பரியங்களைப் பின்பற்றுகிறார்கள். கேரளத்தின் மற்ற பகுதிகளைப் போலவே மாறஞ்சரியிலும் இந்து சமய சடங்குகள் வழக்கமாக நடத்தப்படுகின்றன. மாறஞ்சேரி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு உண்டு.[2] போக்குவரத்துமாறஞ்சேரிக்கு அருகில் குட்டிப்புரம், குருவாயூர் ஆகிய தொடருந்து நிலையங்கள் உள்ளன. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கரிப்பூரில் (80 கி.மீ.) உள்ளது. கொச்சி பன்னாட்டடு வானூர்தி நிலையம் 94 கி.மீ. தொலைவில் உள்ளது. மாநில நெடுஞ்சாலை மாறஞ்சேரி வழியாக செல்கிறது, இது சாலை போக்குவரத்துக்கு வசதியாக உள்ளது. மாறஞ்சேரி கிராமம் குட்டிப்புரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பல் வழியாக செல்கிறது, இது வடக்கே கோவா மற்றும் மும்பையையும் தெற்கில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தையும் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. குருவாயூர் மற்றும் பொன்னானியை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண்.62, மாறஞ்சேரி வழியாக செல்கிறது. நிர்வாகம்மாறஞ்சேரி ஊராட்சி 19 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, கிராம ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. ஊராட்சியானது ஊராட்சித் தலைவரின் தலைமையில் உள்ளது. மாரஞ்சேரி கிராம ஊராட்சியில் உள்ள வார்டுகள்வசதிகள்இங்குள்ள பையாம் காயல் அமைதியான, பச்சை விளிம்புகள் கொண்ட ஒரு உப்பங்கழியாகும். இது நீர் விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது படகுப் போட்டி நடத்தப்படுகிறது. பார்வையாளர்களுக்கு நிரந்தர பார்வையாளர் மாடம் உள்ளது, மேலும் ஏரியில் கிட்டத்தட்ட இரண்டு டசன் நாட்டுப் படகுகள் உள்ளன. ஆண்களும், பெண்களும் என இரு பாலினத்தவரும் போட்டியில் கலந்துகொள்கின்றனர். பருவமழையின் போது, நெல் வயல்களில் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை தண்ணீர் நிரம்பியபடி இருக்கும். அச்சமயங்களில் வலசை வரும் பல பறவைகள் மற்றும் சிறிய உயிரினங்கள் அடிக்கடி இங்கு வருகின்றன. இந்த நீர் தேங்கிய நெல் வயல்களை கேரளத்தில் கோலே நிலம் என்று அழைக்கின்றனர். காக்க துருத்து (காக்கைத் தீவு) என்ற ஒரு சிறிய தீவு இங்கு உள்ளது. இது பருவ காலங்களில் வலசை வரும் பறவைகளின் தங்கும் இடமாக உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் பறவைகள் வந்து சேரும். சில சைபீரியா மற்றும் ஐரோப்பா, இமயமலைப் பகுதிகளிலிருந்தும், சில உள்நாட்டு இனங்கள் தமிழ்நாடு, கருநாடகத்திலிருந்தும் வருகின்றன. ஏப்ரல் மாதத்தில், அவை புறப்படத் தொடங்குகிறன. பறவைகளைப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் சூன் முதல் ஆகத்து வரை. வலசை வரும் பறவைகளுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறந்த காலமாகும்.[சான்று தேவை]</link>[ விவரங்கள் தேவை ] சீட் குளோபல் பள்ளி மாறஞ்சேரியில் உள்ளது. மராடி பாடம் சுற்றிப்பார்க்க ஏற்ற இடம்.[சான்று தேவை]</link>[ விவரங்கள் தேவை ] . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia