மாறுநிலை எண் (கணிதம்)![]() வகை நுண்கணிதத்தில் ஒருமெய்யெண் சார்பின் மாறுநிலப்புள்ளி (critical point) அல்லது மாறுநிலை எண் (critical number) என்பது, அச்சார்பின் ஆட்களத்தில் அமையும் ஒரு மதிப்பிற்கு, சார்பு வகையிடத்தக்கதாக இல்லாமலோ அல்லது வகைக்கெழுவின் மதிப்பு பூச்சியமாகவோ இருந்தால் ஆட்களத்தின் அம்மதிப்பு மாறுநிலைப் புள்ளி அல்லது மாறுநிலை எண் எனப்படும்.[1][2] மாறுநிலைப் புள்ளியில் சார்பின் மதிப்பு மாறுநிலை மதிப்பு (critical value) என அழைக்கப்படும். ஒருமாறிச் சார்புகளுக்கு வரையறைஒருமாறியில் அமைந்த மெய்யெண் சார்பின் மாறுநிலை எண்னைப் பின்வருமாறு வரையறுக்கலாம்: ஒருமாறியில் அமைந்த ƒ(x), மெய்யெண் சார்புக்கு அதன் ஆட்களத்தில் அமைந்த ஒரு மதிப்பு x0 -ல், சார்பு வகையிடத்தக்கதாக இல்லாமலோ அல்லது சார்பின் வகைக்கெழு பூச்சியமாகவோ இருந்தால் (ƒ′(x0) = 0), x0 சார்பின் மாறுநிலை எண் என்றும் ƒ -ன் இணையாட்களத்தில் அமையும் மாறுநிலை எண்ணின் பிம்பம், மாறுநிலை மதிப்பு என்றும் அழைக்கப்படும். மாறுநிலை எண் கருத்தை, ƒ -ன் வரைபடம் மூலமும் காணலாம். ஒரு மாறுநிலைப் புள்ளியில், சார்பின் வளைவரைக்கு தொடுகோடு இல்லாமல் இருக்கலாம் அல்லது தொடுகோடு இருந்தால் அது நிலைக்குத்துக் கோடாகவோ அல்லது கிடைமட்டக் கோடாகவோ இருக்கும். தொடுகோட்டை நிலைக்குத்துக் கோடு அல்லது கிடைக்கோடாக கொண்ட (வகைக்கெழு பூச்சியமாக இருக்கும்) மாறுநிலைப் புள்ளி, சார்பின் நிலைப்புள்ளி என அழைக்கப்படும். உகமம் காணல்ஃபெர்மா தேற்றத்தின்படி, இடஞ்சார்ந்த பெருமம் மற்றும் சிறுமம், மாறுநிலைப் புள்ளிகளில் மட்டுமே அமைகிறது. அதாவது ஒவ்வொரு மாறுநிலைப் புள்ளியும் இடஞ்சார்ந்த பெரும அல்லது சிறுமப் புள்ளியாக அமையும். ஆனால் நிலைப் புள்ளிகள் அனைத்தும் பெரும அல்லது சிறுமப் புள்ளிகளாக அமையாது.
எடுத்துக்காட்டு: ƒ(x) = x3 சார்பின் வளைவரையில் x = 0 -ல் முதல் வகைக்கெழு பூச்சியம். எனவே இது ஒரு நிலைப் புள்ளி. ஆனால் இப்புள்ளியில் சார்புக்கு பெருமமோ சிறுமமோ கிடையாது. இது வளைவரையின் ஒரு வளைவுமாற்றுப் புள்ளியாகும்.
ƒ(x) = x2sin(1/x) ; x ≠ 0 என்ற சார்புக்கு x = 0 எனில் ƒ(0) = 0, . எடுத்துக்காட்டுகள்
பலமாறிச் சார்புகள்இப்பிரிவில் சார்புகளை அனைத்து உயர்வரிசை வகைக்கெழுக்களும் கொண்ட சார்புகளாக எடுத்துக் கொள்ளலாம். பல மெய்மாறிகளில் அமைந்த அத்தகைய சார்பின் மாறுநிலைப் புள்ளியில் சார்பின் அனைத்து பகுதி வகைக்கெழுக்களும் பூச்சியமாகும். பன்மடிவெளியில் அமைந்த சார்பின் மாறுநிலைப் புள்ளியில் அச்சார்பின் வகையீடு பூச்சியமாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia