மாவீரன் (1986 திரைப்படம்)

மாவீரன்
இயக்கம்இராஜசேகர்
தயாரிப்புஜி. அனுமந்தராவ்
கதைராஜசேகர்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், விஜயகுமாரி, சுனிதா, தியாகராஜ், விட்டல் பிரசாத், ரா. சங்கரன், பாப் கிரிஸ்டோ, வைத்தி, டினு வர்மா, பெங்களூர் சிதம்பரம்
வெளியீடு1986
மொழிதமிழ்

மாவீரன் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

தயாரிப்பு

மாவீரன் என்பது மன்மோகன் தேசாயின் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமான மார்ட்டின் என்பதன் மறு ஆக்கமாகும். மேலும் அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளையும் பயன்படுத்தினர். இது விலையுயர்ந்த 70 மி.மீ. திரைப்பட வடிவத்தில் படமாக்கப்பட்டது. அவ்வாறு செய்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] ஆறு பாடல்களை ஸ்டீரியோபோனிக் வடிவமைப்பில் உருவாக்கினார். இந்தச் சாதனையை பெற்ற முதல் படமாக மாவீரன்.

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "அம்மா அம்மா" மலேசியா வாசுதேவன் வாலி 04:22
2 "எழுகவே" மலேசியா வாசுதேவன் வைரமுத்து 04:28
3 "ஹே மைனா" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:26
4 "நீ கொடுத்தத" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா வாலி 07:01
5 "சொக்கு பொடி" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:37
6 "வாங்கடா வாங்க" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:23

வெளியீடு

1986 நவம்பர் 1 அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்

  1. "Maaveeran (Old) (1986)". Raaga.com. Archived from the original on 3 December 2013. Retrieved 24 December 2013.
  2. "Maaveeran Tamil Film LP Vinyl LP Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 4 August 2022. Retrieved 4 August 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya