விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)
விக்ரம் (Vikram) 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராஜசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். குமுதம் வார இதழில் தொடர்கதையாக வந்து அதன் பின்னர் படமாக்கப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புகமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை ஆலோசனையின் போதும், திரைப்படத்தின் முன் தயாரிப்பின் போதும் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தையே தன் முதல் தேர்வாக வைத்திருந்ததாக பல தருணங்களில் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில், திரையுலகில், மணிரத்னம் பெரிய பொருட்செலவில் தயாராகும் வணிகரீரியான படங்களில் பரிசோதிக்கப்படாத இயக்குநராக இருந்ததால் அது கைகூடவில்லை எனவும் தெரிவித்திருந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரமாகத் தான் இருந்தது.[1][2] வரவேற்புகமல்ஹாசன் இத்திரைப்படத்தைப் பற்றி பின்னாளில் கூறும் போது அந்நாளைய ஊடகங்களால் விக்ரம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் என்றே கூறியுள்ளார்.[3] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia