மீனா கேஷ்வர் கமால்
மீனா கேஷ்வர் கமால் (Meena Keshwar Kamal ; பிப்ரவரி 27, 1956 - பிப்ரவரி 4, 1987), பொதுவாக மீனா என்று அழைக்கப்படும் இவர் ஓர் ஆப்கானிய புரட்சிகர அரசியல் ஆர்வலரும், பெண்ணியவாதியும், பெண்கள் உரிமை ஆர்வலரும், ஆப்கானித்தான் பெண்கள் புரட்சி சங்கத்தின் நிறுவனருமாவார். இவர் 1987இல் படுகொலை செய்யப்பட்டார். சுயசரிதை![]() 1977ஆம் ஆண்டில், இவர் காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தபோது,[2] ஆப்கானிஸ்தான் பெண்கள் புரட்சிகர சங்கம் (RAWA) என்ற அமைப்பை நிறுவினார். இது பெண்களுக்கு சமத்துவத்தையும் கல்வியையும் ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து "ஆப்கானித்தானின் நலிந்த மற்றும் அமைதியான பெண்களுக்கு" குரல் கொடுக்கிறது. மக்களாட்சிக் குடியரசின் நிகழ்ச்சி நிரலில்[3] சௌர் புரட்சியும் பெண்களின் உரிமைகளும் உயர்ந்திருந்தாலும், ஆப்கானித்தானில் பெண்களின் முன்னேற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்று கமல் உணர்ந்தார்.[4] 1979இல் இவர் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவும், அதற்கு எதிராக ஆதரவு திரட்டவும் பள்ளிகளில் கூட்டங்களை ஏற்பாடு செய்தார். மேலும், 1981ஆம் ஆண்டுகளில், 1981இல், இவர் பாயம்-இ-சான் (மகளிர் செய்தி) என்ற இருமொழி பெண்ணிய இதழைத் தொடங்கினார்.[5] [6] [7] அகதிக் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் உதவுவதற்காக இவர் வாடன் பள்ளிகளை நிறுவி, அவற்றில் மருத்துவமனை வசதி, நடைமுறை திறன்களை கற்பித்தல் ஆகிய இரண்டையும் வழங்கினார்.[7] 1981ஆம் ஆண்டின் இறுதியில், பிரெஞ்சு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், மீனா பிரான்சு சோசலிசட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கான் எதிர்ப்பு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். போரிஸ் பொனமரியேவ் தலைமையில் நடந்த இம்மாநாட்டில் சோவியத் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மீனா வெற்றி அடையாளத்தை அசைக்கத் தொடங்கியபோது பங்கேற்பாளர்கள் ஆரவாரம் செய்ததால் மண்டபத்தை விட்டு வெளியேறினர். [8] பின்னர், இவர் ஆப்கானித்தான் மார்க்சிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக பாக்கித்தானின் குவெட்டா நகரில் தனது ஆப்கானித்தான் பெண்களின் புரட்சிகர அமைப்பை இவர் ஆரம்பித்தார். சொந்த வாழ்க்கைகமால், ஆப்கானித்தான் விடுதலை அமைப்பின் தலைவர் பைசு அகமதுவை திருமணம் செய்து கொண்டார்.[9] அகமது நவம்பர் 12, 1986 அன்று குல்புதீன் ஹேக்மத்யாரின் முகவர்களால் கொல்லப்பட்டார் [10] [11] மீனா மூன்று மாதங்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. படுகொலைகமால், பாக்கித்தானின் குவெட்டாவில் பிப்ரவரி 4, 1987 அன்று படுகொலை செய்யப்பட்டார் கொலையாளிகள் யார் என்பது குறித்து அறிக்கைகள் வேறுபடுகின்றன.[12] மே 2002இல், பாக்கித்தானில் கமாலின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டனர். மரபுநவம்பர் 13, 2006 அன்று டைம் பத்திரிக்கையின் சிறப்பு இதழில், "60 ஆசிய நாயகர்களில்" மீனாவை சேர்த்து, "அவர் இறக்கும் போது அவருக்கு 30 வயதுதான் என்றாலும், மீனா ஏற்கனவே அறிவின் சக்தியின் அடிப்படையில் ஒரு ஆப்கானித்தான் பெண்கள் உரிமை இயக்கத்தின் விதைகளை விதைத்திருந்தார்" என்றுஎழுதியது. [13] ஆப்கானித்தான் பெண்கள் உரிமை இயக்கம் இவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது "மீனா தனது 12 வருட குறுகிய ஆனால் புத்திசாலித்தனமான வாழ்க்கையை தன் தாய்நாட்டிற்காகவும் தனது மக்களுக்காகவும் போராட கொடுத்தார். கல்வியறிவின்மை, அடிப்படைவாதம் பற்றிய அறியாமை மற்றும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்ற பெயரில் நம் பெண்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் விற்பனை நிலைகள் இருந்தபோதிலும், இறுதியாக அவர்களில் பாதி பேர் எழுந்து சுதந்திரத்தை நோக்கிய பாதையை கடந்து செல்வார்கள் என்ற வலுவான நம்பிக்கை அவருக்கு இருந்தது" என்றது[8]
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia