முக்தா (நடிகை)முக்தா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை பானுமதி, பானு என்ற பல பெயர்களிலும் அழைக்கின்றனர். குடும்பம்முக்தா 2015 ஆம் ஆண்டு பிரபல மலையாள தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு 2016 ஆம் ஆண்டு கியாரா என்ற பெண்குழந்தை பிறந்தது. ரிங்கு டோமி சொந்தமாக ஒரு அழகு நிலையமும் நடத்தி வருகிறார். முக்தா கணவர் குழந்தையுடன் கேரளாவில் வசித்து வருகின்றார். தமிழ் திரையுலகம்முக்தா 2007 இல் ஹரி என்பவர் எழுதி இயக்கிய தாமிரபரணி திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். தாமிரபரணியில் விஷாலுடன் பானுமதி சரவணப்பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் பானுமதி என திரையுலகில் அறியப்படுகிறார். இவர் 2009 இல் அழகர் மலை திரைப்படத்தில் ஆர்கே நாயகியாக நடித்துள்ளார். இதனை எஸ். பி. இராஜ்குமார் இயக்கியிருந்தார். 2013 இல் எழில் இயக்கத்தில் வெளிவந்த தேசிங்குராஜா திரைப்படத்தில் விமலுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். திரைப்படவியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia