முத்துகாபட்டி ஊராட்சி (Muthugapattti Gram Panchayat), தமிழ்நாட்டின்நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[5]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6196 ஆகும். இவர்களில் பெண்கள் 3128 பேரும் ஆண்கள் 3068 பேரும் உள்ளனர். இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் கொல்லிமலை அடிவாரத்தில் புதுக்கோம்பை என்ற இடத்தில் ஒட்டடி பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டடம் இல்லை, இது தோப்பில் அமைந்துள்ளது. இங்கு செல்ல சிற்றுந்து வசதி உள்ளது.