முரல் மீன்
முரல் மீன் (Needlefish (குடும்பம் Belonidae) அல்லது Long Tom)[1] என்பது கடலின் திறந்த மேற்பரப்புப் பகுதியில் வாழும் மீன்களை வேட்டையாடி உண்கின்ற மீனாகும். இவற்றில் சில இனங்கள் கடலின் உவர் நீரிலும் நன்னீர் சூழலிலும் வாழக்கூடியன. (எ.கா., Strongylura).[2] இவை குறுகிய நீண்ட தாடையையும் கூரான பற்களைக் கொண்டவையாக உள்ளன. விளக்கம்முரல் மீன்கள் மெல்லிய உடல்வாகைக் கொண்டவையாகவும் 3 முதல் 95 cm (1.2 முதல் 37.4 அங்) நீளம்வரை வளரக்கைடியனவாகவும் உள்ளன. இவற்றின் முதுகுத் துடுப்புக்கு நேர் எதிராக குதத்துடுப்பு என இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இதன் நீண்ட குறுகிய மூக்கும் அதில் கூரான பற்களுமே இதன் தனித்தன்மையாகும். இதில் பல இன மீன்களில் வயதுவந்த மீன்களுக்கு மட்டும் அதன் மேல்தாடை முழுவளர்சி அடைந்திருக்கும், அதாவது முரல் மீன்களின் கீழ்த் தாடை குறைந்த நீளமுடையதாகத் தோன்றும். இவற்றின் மூக்கு முழுமையாக வளர்ச்சியடையும்வரை மிதவைவாழிகளையே உண்ணும். முரல் மீனகள் இனச்சேர்கை செய்து முட்டைகளை இடுகின்றன. ஆண் மீன்கள் பெண் மீன்களுடன் பொதுவாக அலைகள் மேல் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia