முள்ளெலி

முள்ளெலி
Hedgehogs[1]
ஐரோப்பிய முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
எரினசெமொர்பா
குடும்பம்:
எரினசிடே
துணைக்குடும்பம்:
எரினசீனே

G. Fischer, 1814
பேரினம்
  • அட்லெரிக்ஸ்
  • எரினேசியஸ்
  • ஹெமிசினஸ்
  • நிலவொளி
  • பராச்சினஸ்

முள்ளெலி (Hedgehog, விலங்கியல் பெயர்: Erinaceinae) என்பதை, ஆங்கிலத்தில் முட்காட்டுப்பன்றி என்ற பொருளில் அழைக்கின்றனர். இவ்வகை விலங்குகள், பெருச்சாளி போன்று உருவத்திலும், உடலின் மேற்புறம் முள்ளம் பன்றியைப் போலவும் அமைப்புடையதாக இருக்கின்றன.

விலங்கின வகைப்பாடு

எரினசெமொர்பா என்ற வரிசையில் இப்போதுள்ள, ஒரே உயிரியல் குடும்பம் எரினசிடே ஆகும். இக்குடும்பத்தில் இரண்டு [note 1] துணைக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் முள்ளெலிகள், ஒரு துணைக்குடும்பமாகும்.[note 2]

விளக்கம்

தோற்றத்தில் முள்ளம் பன்றியைப்போல் தோன்றினாலும் இவை முள்ளம் பன்றி கிடையாது. இவை அரை கிலோ வுக்கும் குறைவான எடையுடன், 7 முதல் 15 செமீற்றர்கள் நீளமுடன் ஒரு சிறிய தேங்காய் அளவு இருக்கும். இதன் உடலின் மேல் 2 முதல் 3 செமீற்ரர்கள் முடகளைக் கொண்டிருக்கிறது.

உணவு மற்றும் வாழ்விடம்

இரவாடி உயிரினமான இது பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய ஊர்வன போன்றவற்றை இரவு நேரங்களின் வேட்டையாடி உட்கொள்கிறது. தெரிக்காடுகள், புதர்கள், வறண்ட நிலப்பகுதிகள், மேலும் உயரமான மலைப்பகுதிகள் போன்றவற்றில் வாழுகிறது. பூச்சிகளை இவை அதிகமாக உட்கொள்வதால் சங்கிலியின் தொடர்புக்கு உருதுணையாக இருக்கிறது.

உயிரிய நிலை

உலகில் இதுவரை 16 வகையான முள்ளெலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 13 வகை முள்ளிலிகள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் 3 வகையான முள்ளிலிகள் காணப்படுகின்றன. அவை நீள்காது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, மற்றும் தென்னிந்திய முள்ளெலி போன்றவையாகும்.

வாழ்விடங்கள்

இந்திய நாட்டில் தமிழகம், கேரளம், ஆந்திராவில் சில இடங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது. மேலும் 1832 முதல் 1972 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென் தமிழகத்தில் வருஷநாடு பள்ளத்தாக்கு, மன்னார் வளைகுடா, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நீலகிரி, சென்னை, ஈரோடு, அவிநாசி, பெருந்துறை, வில்லிப்புத்தூர், பாண்டிச்சேரி, திருப்பூர் போன்ற இடங்களில் அதிகமாக காணப்பட்டது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்குப்படி கடந்த 10 ஆண்டுகளில் 80% அழிந்துவிட்டதாக தெரிகிறது. [2]

அழிவு

தமிழகத்தில் இராமநாதபுரம் வட்டம் கீழக்கரைப் பகுதியில் வாழும் மக்கள் இதனை நெய் கலந்து சாப்பிட்டால் கக்குவான் இருமல் நோய் மட்டுப்படுவதாக கூறுகிறார்கள். அதோடு காற்றாலை, தீ, காடுகள் அழிப்பு, புதிய சாலை அமைத்தல் இப்படியாக இவ்வுயிரினத்தின் வாழ்விடம் பெருவாரியாக அழிக்கப்பட்டுவிட்டது.

காட்சியகம்

குறிப்புகள்

  1. 1) en:Erinaceinae, 2) en:Galericinae - முள்ளெலிகள்
  2. துணைக்குடும்பம் (உயிரியல்) - sub family

மேற்கோள்கள்

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். pp. 212–217. ISBN 978-0-8018-8221-0.
  2. அந்த முள்பந்துகள்?தி இந்து தமிழ் 20 ஆகசுட் 2016
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya