முள் முட்டைக்கோசு
முள் முட்டைக்கோசு (globe artichoke) ( சைனாரா கார்டங்குலசு வகை. சுகோலிமசு),[1] அல்லது பிரெஞ்சு முள் முட்டைக்கோசு அல்லது பச்சை முள் முட்டைக்கோசு (ஐக்கிய அமெரிக்காவில்)[2] என்பது உணவுக்காகப் பயிரிடப்படும் திசில் இனத்தின் பயிரிடும்வகைகளில் ஒன்றாகும். இத்தாவத்தின் பூக்கும் முன்பான மொட்டுகள் உண்ணத்தக்கனவாக அமைகின்றன. முள் முட்டைக்கோசுவின் பூமொட்டுகள் பல சிறு பூமொட்டுகளின் மஞ்சரியாக, உண்தகு பூவடி சிற்றிலைகளோடு, அமையும் . இந்த மோட்டுகள் பூத்துவிட்டால், உண்ணவியலாத முருடான வடிவில் இருக்கும். இந்த தாவர இனத்தின் மற்றொரு பயிரிடும்வகை கார்தூன் ஆகும். இது நடுக்கடல்தரை நாட்டினைத் தாயகமாகக் கொண்ட ஒர் ஆண்டுத் தாவரமாகும். இந்த இரு பயிரிடும்வகைகளும் பல் காட்டுவகை வடிவங்களையும் பல பயிரிடும்வகைகளையும் கொண்டுள்ளன. விவரிப்புமுள் முட்டைக்கோசு 1.4 மீ முதல் 2 மீ உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் வளைந்த ஆழ்மடல்களாக வெண்பசுமைநிறத்தில் 50 செமீ முதல் 82 செமீ நீளத்துடன் அமைகின்றன. பூக்கள் உண்தகும் மொட்டில் இருந்து 8செமீ முதல் 15 செமீ விட்டமுள்ள பெரிய மஞ்சரியாக பல முக்கோண செதிள்களுடன் வளர்கின்றன; சிறு பூவிதழ்கள் ஊதாவண்ணத்தில் உள்ளன. மொட்டுகளின் உண்ணும் பகுதி முதன்மையாக புத்திளம் பூவடிச் சிற்றிலைகளும் முதிரா பூவிதழ்களின் திரள் அமைந்த அடிப்பகுதியும் அமைகின்றன. மொட்டின் நடுப்பகுதி தாடி எனப்படுகிறது. இவை உண்ணத்தகாத பெரிய பூவிதழ்களாகும். வேதியியல் உட்கூறுகள்முள் முட்டைக்கோசு அப்பிஜெனின், இலூட்டியோலின் ஆகிய உயிரூக்கி வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளது.[3] முள் முட்டைக்கோசு பூந்தலை அல்லது மஞ்சரியில் உள்ள உயரளவு எதிர் உயிரகப் பொருள் வேறு எந்தக் காய்கறிகளிலும் அமைவதில்லை.[4] Cynarine is a chemical constituent in சைனாரா தாவரங்களில் சைனாரைன் எனும் வேதிப்பொருள் அமைந்துள்ளது. முள் முட்டைக்கோசில் உள்ள பெரும்பான்மை சைனாரைன் இலைத்தழையில் உள்ளது.எனினும் உலர் இலை, தண்டிலும் சைனாரைன் ஓரளவு உள்ளது. வேளாண்விளைச்சல்![]() இன்று, முள் முட்டைக்கோசு நடுத்தரைக்கடல் படுகைகளில் செறிவாகப் பயிரிடப்படுகிறது. முதன்மை ஐரோப்பிய விளைப்பாள்ர்களாக, இத்தாலி,பிரான்சு, எசுபானியா ஆகிய நாடுகளும் முதன்மை அமெரிக்க விளைவிப்பாளர்களாக அர்ஜென்டீனா, பெரு, ஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியா ஆகிய நாடுகளும் அமைகின்றன.ஐக்கிய அமெரிக்காவின் மொத்த விளைச்சலும் கலிபோர்னியாவில் அமைகிறது. இந்த விளைச்சலில் 80% கலிபோர்னியாவில் உள்ள மான்டெரே ஊரகப் பகுதியில் விளைகிறது; கலிபோர்னியாவின் காசுட்ரோவில்லி தன்னைகௌலகின் முள் முட்டைக்கோசு மையமாக அறிவித்துக் கொள்கிறது. இது ஒவ்வோராண்டும் முள் முட்டைக்கோசு விழா நடத்துகிறது. அண்மையில் முள் முட்டைக்கோசு தென் ஆப்பிரிக்காவிலும் வால் ஆற்றங்கரையில் அமைந்த பாரிசு எனும் சிறு நகரியத்தில் பயிரிடப்படுகிறது.
பயிரிடும்வகைகள்![]() ஒட்டுமுறையில் பரவும் பயிரிடும்வகைகள்
விதைவழிப் பரவும் பயிரிடும்வகைகள்
பயன்பாடுகள்![]() உணவாகபெரிய முள் முட்டைக்கோசு தண்டு ஒட்டிய பத்து மிமீ அளவுக்கு மேற்பகுதியை வெட்டி விட்டு, எஞ்சிய பகுதியே சமைக்க பயன்படுத்தப்படுகிறது. உண்ண இடையூறு தரும் முட்களை நீக்க செதிளின் காற்பகுதி வரை வெட்டப்படுகிறது. முள் முட்டைக்கோசு நீரில் கொதிக்கவைத்தோ நீராவியில் வேகவைத்தோ சமைக்கப்படுகிறது. சமைத்த பதப்படுத்தாத முள் முட்டைக்கோசு மென்மணம் வாய்ந்தது. முள் முட்டைக்கோசுவைக் கொதிக்க வைக்கும்போது உப்பு சேர்க்கலாம். மேற்பகுதி வெட்டிய முள் முட்டைக்கோசு நொதிப்பாலும் பச்ச்சையம் உயிரகவேற்றம் அடைவதாலும் பழுப்புநிறம் அடைகிறது. இந்நிற மாற்றத்தை ஓரளவு தணிக்க முள் முட்டைக்கோசை வினிகர் கலந்த அல்லது எலுமிச்சம் பழச் சாறிட்டோ தண்ணீரில் வைக்கலாம். மேற்கோள்கள்
Rezazadeh, A., Ghasemnezhad, A., Barani, M., & Telmadarrehei, T. (2012). Effect of Salinity on Phenolic Composition and Antioxidant Activity of Artichoke (Cynara scolymus L.) Leaves. Research Journal of Medicinal Plant, 6(3). வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia