மெய்ம்மொழிச் சரிதைமெய்ம்மொழிச் சரிதை என்னும் நூல் [1] தனி நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் கிடைத்த பாடல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இது பர-பக்கம், சுப-பக்கம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இந்த அமைப்பு சிவஞான சித்தியார் நூலின் பாகுபாட்டு முறைமை ஆகும். பர பக்கம் பகுதியில் இருந்த 124 பாடல்களில் 82 பாடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. 42 பாடல்கள் தெளிவாக உள்ளன. சுப பக்கம் பகுதியில் 362 பாடல்கள் உள்ளன. இவற்றில் 106 பாடல்கள் பெருந்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. [2] இளங்காரிகுடி மெய்ம்மொழித் தேவர் [3] இந்த நூலின் ஆசிரியர். சிவஞான சித்தியார், சிவார்ச்சனா போதம் என்னும் நூல்கள் கி. பி. 1350-ல் தோன்றியவை. இந்த நூலும் இதே காலத்தில் தோன்றியது. மெய்ம்மொழித் தேவர் அரசர் குடியில் பிறந்து துறவு பூண்டவர். பெருந்திரட்டில் இடம்பெற்றுள்ள இந்த நூலின் பாடல்கள் அறுசீர் விருத்தங்கள். அவற்றில் அட்டாங்க யோகம், அட்டமா சித்தி போன்றவை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் இந்த நூலாசிரியரை வேதாந்தம் கற்ற சித்தாந்தவாதி எனக் காட்டுகின்றன. அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia