மோர்தோவியா அரங்கு
மோர்தோவியா அரங்கு (Mordovia Arena, உருசியம்: «Мордовия Арена») உருசியக் கூட்டமைப்பில் தன்னாட்சி பெற்ற மொர்தோவியா குடியரசின் தலைநகராகிய சரான்சுக்கில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்களுக்காக சீரமைக்கப்பட்டுள்ளது. தவிரவும் மோர்தோவியா சாரன்சுக்கி கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் உள்ளது. இதன் கொள்ளளவு 44,442 பார்வையாளர்களாகும். இந்த அரங்கின் மொத்தப் பரப்பு 122,700 சதுர மீட்டராகும். இந்த அரங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது; நகரின் முதன்மையான கட்டமைப்புகளிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. இதன் வடிவமைப்பு சூரியனின் படிமத்தை ஒத்துள்ளது. இது மோர்தோவிய மக்களின் தொன்மை மரபுகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1] பிபா உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சாரான்சுக் மற்றும் மோர்தோவியாவின் மிகப்பெரும் விளையாட்டரங்காகவும் மனமகிழ் மையமாகவும் விளங்கும்.[2] 2018 பிபா உலகக் கோப்பைஇந்த விளையாட்டரங்கில் 2018 பிபா உலகக் கோப்பைப் போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 21, 2018 அன்று சோதனை ஆட்டம் ஒன்று நடத்தப்பட்டது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia