கிரெத்தோவ்சுக்கி அரங்கு
கிரெத்தோவ்சுக்கி அரங்கு (Krestovsky Stadium[3] (உருசியம்: стадион «Крестовский») உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் கிரெத்தோவ்சுக்கி தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பின்னிழுக்கக்கூடிய கூரையுடனான விளையாட்டரங்கம் ஆகும். இது அலுவல்முறையாக சென் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கம் எனக் குறிப்பிடப்படுகின்றது; இது செனித் காற்பந்துக் கழகம் சென் பீட்டர்சுபெர்கின் தாயக அரங்கமாக விளங்குவதால் செனித் அரங்கு எனவும் அழைக்கப்படுகின்றது.[4]. இந்த அரங்கம் 2017இல் 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டிகளுக்காகக் கட்டப்பட்டது.[5] துவக்கத்தில், திசம்பர் 2008 இல் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது[6] பின்னர் இது 2011 இன் பிற்பகுதி எனவும் பின்னர் பலமுறையும் திருத்தப்பட்டு[7] இறுதியில் 2017 இல் திறக்க முடிவு செய்யப்பட்டது. மே 2017 மதிப்பீடுகளின்படி இதன் கட்டமைப்பு 518% தாமதமாகவும் 548% செலவு மதிப்பீட்டிற்கு கூடுதலாகவும் எடுத்துள்ளது.[5][8][9] இந்த விளையாட்டரங்கத்தின் கொள்ளளவு 67,000 பேராகும்.[10] இது 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பையின்போது சென் பீட்டர்ஸ்பேர்க் அரங்கு எனப்பட்டது;[11] 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும் இவ்வாறே குறிப்பிடப்படும்.[12] இதுவரை $1.1 பில்லியன் செலவு பிடித்துள்ள இந்த அரங்கமே மிகவும் கூடுதலான செலவில் கட்டப்பட்ட விளையாட்டரங்கமாக உள்ளது.[13] காட்சிக்கூடம்
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை
2018 பிபா உலகக்கோப்பை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia