யசோதர் மாணிக்கியா
யசோதர் மாணிக்கியா (Yashodhar Manikya) (இ. 1623), ஜசோதர் மாணிக்கியா என்றும் அழைக்கப்படும் இவர், 1600 முதல் 1618 வரை திரிபுரா இராச்சியத்தின் மாணிக்கிய வம்ச ஆட்சியாளராக இருந்தார். இவரது ஆட்சி முடியாட்சியை தற்காலிகமாக தூக்கியெறிந்து, முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டதன் மூலம் ராச்சியத்தின் வரலாற்றின் சுருக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[1] ஆரம்பகால ஆட்சிமுதலாம் இராசதர் மாணிக்கியாவின் மகனும் வாரிசுமான யசோதரால் 1600 இல் தனது தந்தை இறந்தவுடன் உடனடியாக அரியணை ஏற முடியவில்லை. வரலாற்றாசிரியர் ஜெய் பிரகாஷ் சிங், பழைய மன்னரின் வாரிசான யசோதரின் அசுபமான சாதகக் குறிப்பு, பிரபுக்கள் அவரை மன்னராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்று கூறுகிறார். இதற்கிடையில் அதிகாரம் பெற்ற தனது உறவினரான ஈசுவர் மாணிக்கியாவையும், தர்ம மாணிக்கியா (எதிரியான அரக்கான் இராச்சியத்தால் ஆதரிக்கப்பட்டவர்) மற்றும் வீரபத்ர மாணிக்கியா போன்றவர்களின் முயற்சிகளையும் எதிர்த்து இவர் இறுதியில் அரியணை ஏறினார்.[2][3] இராசதரைப் போலவே, யசோதரும் ஒரு பக்தியுள்ள ஆட்சியாளராக இருந்தார். இவரும் முன்னாள் ஆட்சியின் கீழ் இராச்சியத்தில் தொடங்கிய வைணவத்தின் பரவலைத் தொடர்ந்தார். இவரது தந்தையைப் போலவே, இவருக்கு நிர்வாகம் மற்றும் போரில் அதிக ஆர்வம் இல்லை. இதன் விளைவாக அரச அதிகாரம் பலவீனமடைந்தது.[4] இராணுவத்தின் வீழ்ச்சியும் ஏற்பட்டது. இருப்பினும், இவரது ஆட்சியின் போது சில இராணுவ முற்றுகையின் பதிவுகள் உள்ளன. இதில் அரக்கானிய மன்னர் உசேன் ஷாவுடனான மோதலும், புலுவா இராச்சியத்திற்கு எதிரான தாக்குதல்களும் அடங்கும். இது இறுதியில் பிந்தைய அழிவில் விளைந்தது.[5] முகலாய வெற்றி1618 ஆம் ஆண்டில், வங்காளத்தின் முகலாய ஆளுநரான இப்ராகிம் கான் பாத்-இ-சங், திரிபுராவை வங்காளத்தில் இணைக்கும் நோக்கத்துடன் தரை மற்றும் கடல் தாக்குதலைத் தொடங்கினார். 1000 குதிரைப்படை, 60,000 காலாட்படை மற்றும் 200 போர் யானைகள் அடங்கிய இரண்டு தரைப்படைகள் ஒரு வலிமைமிக்க கடற்படையுடன் அனுப்பப்பட்டன. தலைநகர் உதய்ப்பூரைக் கைப்பற்றியதன் மூலம் திரிபுரா இராணுவம் விரைவாக முறியடிக்கப்பட்டது. யசோதர் தனது மனைவிகளுடன் காட்டிற்கு தப்பி ஓடினார். ஆனால் விரைவில் சிறைபிடிக்கப்பட்டு டாக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.[6] முகலாய பேரரசர் ஜஹாங்கீருக்கு காணிக்கை வழங்குவதற்கான நிபந்தனையின் பேரில் இவருக்கு அரியணை திரும்ப வழங்கப்பட்டாலும், யசோதர் மறுத்துவிட்டார்.[7] இவர் வாழ்நாள் முழுவதும் முகலாயக் காவலில் வைக்கப்பட்டார். முதலில் வாரணாசியிலும் பின்னர் மதுராவிலும் சிறை வைக்கப்பட்டார்.[8][6][9] அங்குதான் இவர் 1623 இல் தனது 72வது வயதில் தியானம் செய்து கொண்டிருந்தார்.[10] 1626இல் யசோதரின் தூரத்து உறவினரான கல்யாண் மாணிக்கியா பதவியேற்கும் வரை திரிபுரா முகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.[11] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia