யாசுது மாகாணம்
இயாஸ்த் மாநிலம் (Yazd Province, Persian: استان یزد, Ostān-e Yazd ) ஈரானின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் இயாஸ்த் ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.[1] 131,575 கி.மீ.² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.[2] இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது. ![]() மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia