யூரோப்பியம்(II) ஐதராக்சைடு
யூரோப்பியம்(II) ஐதராக்சைடு (Europium(II) hydroxide) என்பது Eu(OH)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Eu(OH)2·H2O என்ற வாய்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவே இது பெரும்பாலும் காணப்படுகிறது. தயாரிப்புஉலோக நிலை யூரோப்பியத்துடன் 10 மோல்/லி சோடியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) ஐதராக்சைடு ஒற்றைநீரேற்று தயாரிக்கப்படுகிறது.[1] யூரோப்பியம்(III) குளோரைடை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தும் தயாரிப்பு முறைக்கும் சில ஆதாரங்கள் உள்ளன. உலோக அயனிகளின் நீரிய கரைசலை குறைக்கப் பயன்படும் இயோன்சு குறைப்பானைப் பயன்படுத்தி சோடியம் ஐதராக்சைடு சேர்த்து யூரோப்பியம்(II) ஐதராக்சைடு தயாரிப்பதாக இத்தயாரிப்பு முறை அமைகிறது.[2] பண்புகள்யூரோப்பியம்(II) ஐதராக்சைடு செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் உள்ள படிக அமைப்பைச் சேர்ந்ததாகும். a=6.701 ± 0.002, b=6.197 ± 0.002, c=3.652 ± 0.001 A. என்ற அளவுருக்களுடன் இப்படிகம் அமைந்துள்ளது.[1] வெப்பத்தால் சிதைந்து யூரோபியம்(II) ஆக்சைடை (EuO) உருவாக்குகிறது; காற்றில் உடனடியாக ஆக்சிசனேற்றமடைந்து யூரோபியம்(III) ஐதராக்சைடாக மாறுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia