யூரோப்பியம்(III) அசிடேட்டு மற்றும் குரோமியம்(IV) ஆக்சைடு ஆகிய சேர்மங்களின் சமமோலார் கரைசலை வெற்றிடத்தில் 70 பாகைசெல்சியசு வெப்பநிலையில் உலர்த்தி பின்னர் காற்றில் 400 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடேற்றினால் யூரோப்பியம்(III) குரோமேட்டைப் பெறலாம்.[2][5]
யூரோப்பியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று மற்றும் குரோமியம்(III) நைட்ரேட்டு ஒன்பது நீரேற்று ஆகியவற்றை விகிதாச்சார அளவுகளில் கலந்து 30 நிமிடங்களுக்கு 433 கெல்வின் வெப்பநிலையில் 30 நிமிடங்களும் 473 கெல்வின் வெப்பநிலையில் 30 நிமிடங்களும் 1 மணிநேரம் 853 கெல்வின் வெப்பநிலையிலும் வினைபுரியச் செய்யவேண்டும். ஆக்சிசன் வாயு வினை கலவையின் மீது தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு யூரோப்பியம்(III) குரோமேட்டைப் பெறுவது மற்றொரு தயாரிப்பு வழிமுறையாகும்.[4]
ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற அளவில் = a=722.134, c = 632.896 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன், I41/amd (எண். 141) என்ற இடக்குழுவில் நாற்கோண வடிவத்தை ஏற்றுக் கொண்டு யூரோப்பியம்(III) குரோமேட்டு படிகமாகிறது.[2]
யூரோப்பியம்(III) குரோமேட்டின் நீல் வெப்பநிலை 15.9 கெல்வின் ஆகும். 700 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் யூரோப்பியம்(III) குரோமேட்டு யூரோப்பியம் குரோமைட்டாக (EuCrO3) சிதையத் தொடங்குகிறது.[3]
2EuCrO4 → 2 EuCrO3 + O2
மேற்கோள்கள்
↑G. Buisson, E. F. Bertaut, J. Mareschal (1964), "Etude cristallographique des composes TCrO4 (T = terre rare ou Y)", Comptes Rendus Hebdomadaires des Seances de l'Academie des Sciences (in German), vol. 259, pp. 411–413{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)