500-1000 பாகைசெல்சியசு வெப்பநிலையில் யூரோப்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களை வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) தெலூரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
Eu + Te -> EuTe
600 முதல் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு ஓட்டத்தில் யூரோப்பியம்(II) ஐதரைடுடன் தெலூரியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) தெலூரைடு உருவாகும்.[2]
EuH2 + Te -> EuTe + H2
பண்புகள்
யூரோப்பியம்(II) தெலூரைடு கருப்பு நிறத்தில் எதிர்பெர்ரோகாந்தப் பண்புடன் காணப்படுகிறது.[3]திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1] மேலும், இப்படிகம் சோடியம் குளோரைடு படிகவடிவத்தை ஒத்து உள்ளது.[4]
மேற்கோள்கள்
↑ 1.01.11.2Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ed.). Boca Raton: CRC. ISBN978-1-4398-8049-4.