ராதன் விஜயன்
ராதன் விஜயன்; நாராரியன் சங்கிராமவிஜயன்; கர்த்தராயச செயவர்த்தனன் (ஆங்கிலம்: Raden Wijaya; ஜாவானிய மொழி: ꦑꦼꦂꦡꦬꦗ ꦯꦗꦪꦮꦂꦝꦟ; இந்தோனேசியம்: Sri Maharaja Kertarajasa Jayawardhana) என்று அழைக்கப்படுபவர் மயபாகித் இராச்சியத்தை அமைத்தவரும், 1293–1309 வரை வாழ்ந்தவருமான சாவக அரசர் ஆவார்.[1] நகரகீர்த்தாகமம், பாராரத்தோன் முதலான பழம்நூல்கள், ராதன் விஜயனின் வரலாற்றைக் கூறுகின்றன. மங்கோலியப் பேரரசன் குப்லாய் கானுக்கு எதிரான இவரின் வெற்றியும் சாவக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. வரலாறுபாராரத்தோன் கூற்றுப் படி, இவர் சிங்காசாரி அரசனான மகேச செம்பகனின் மைந்தனாவார். புத்தக இராச்சியம் எனும் நூலின் கூற்றுப்படி, அவர் மகிச செம்பகனின் மகள் வழிப் பேரனாவார். நகரகீர்த்தாகமத்தின் பதிவுகளின் படி, மகேச செம்பகனின் மகன் "தயா சிங்கமூர்த்தி"யின் மைந்தராக அறியப் படுகிறார். நகரகீர்த்தாகமம், விஜயன் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின் (1365) எழுதப்பட்டதால், நகரகீர்த்தாகமம் சொல்வது சரியானது என பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. 1290-களில், செயகாதவன் எனும் கேடிரி அரசன், சிங்கசாரிப் பேரரசுக்கு எதிராகச் செய்த கிளர்ச்சியில், சிங்காசாரியின் பேரரசன் கீர்த்தநகரன் கொல்லப்பட்டார். அவருடைய மருமகனான ராதன் விஜயன், மதுராத் தீவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் அப்போதைய ஆட்சியாளரான ஆரிய வீரராஜாவிடம் அடைக்கலம் பெற்றார். அங்கிருந்து ராதன் விஜயன் பலமிகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டார். அதற்கு ஆரிய வீரராசன் உதவினால், அவருக்கும் ஜாவா தீவைப் பங்கிடுவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன் பின் ராதன் விஜயனால் அமைக்கப்பட்ட மயபாகித் அரசில், ஆரிய வீரராசனின் மைந்தர்கள் "ரங்கலாவே", லெம்பு சேரன், நம்பி ஆகியோர், படைத் தளபதிகளாகவும்; முதலமைச்சர்களாகவும் விளங்கினர். ராதன் விஜயன் வாக்களித்தபடியே, மதுரா தீவும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் ஆரிய வீரராசனுக்கு வழங்கப்பட்டன. மங்கோலியப் படையுடன் கூட்டணி1292-இல், கிழக்கு ஜாவாக்கு படையெடுத்து வந்த குப்லாய் கானின் ம்ங்கோலியப் படையுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ராதன் விஜயன், செயகாதவனின் ஆட்சியின் கீழிருந்த சிங்காசாரி அரசை முற்றுகையிட்டார். 1293-இல் செயகாதவாங்கன் தோல்வியுற்று வீழ்ந்தபோது, எவரும் எதிர்பார்க்காத நிலையில் ராதன் விஜயன் ம்ங்கோலியப் படையைத் தாக்கினார்.[2]:200–201 தங்களுக்கு ஒத்துவராத காலநிலையாலும், போர்க் காலத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களாலும் ஏற்கனவே பலமிழந்து போயிருந்த மங்கோலியப் படைகள் ஜாவாவில் இருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று.[3] இதன்பின்னர், கர்த்தராயச செயவர்த்தனன் எனும் பெயருடன் ராதன் விஜயன், மஜபாகித் எனும் புதிய பேரரசின் மன்னராக முடிசூடிக் கொண்டார்.[2]:201,232-233 குடும்பம்சிங்காசாரியின் வீழ்ச்சிக்கு முன்பு, விஜயன் கீர்த்தநகரனின் இளைய மகளான காயத்திரி ராஜபத்தினியை ராதன் விஜயன் திருமணம் செய்து இருக்கிறார். எனினும் மஜபாகித்தை அமைத்த பின்னர், காயத்திரி ராஜபத்தினியின் மூன்று சகோதரிகளையும் ராதன் விஜயன் மணந்திருக்கிறார். அவர்களில் மூத்தவளான பரமேசுவரி திரிபுவனா, பட்டத்து அரசியாக அமர்ந்ததுடன், அவரின் மகனான "செயநகரன்", கேடிரி அரசின் இளவரசராக 1295-இல் முடிசூட்டப்பட்டிருக்கின்றார்.[2]:201 பிரச்சினபராமிர்தா, நரேந்திர துகிதா ஆகியோர் விஜயனின் ஏனைய இரு மனைவியர். இவர்கள் நால்வரும் தவிர, மலாய அரசிலிருந்து கீர்த்தநகரன் கவர்ந்து வந்த இந்திரேசுவரியையும் ராதன் விஜயன் மணந்துகொண்டார். இப்படி ஐந்து தேவியரைக் கொண்டிருந்த போதும், "சண்டி சிம்பிங்" கோயிலில் மாலொருபாகனாகச் சித்தரிக்கப்படும் விஜயனின் இருபுறமும் மரபுக்கேற்ப இருதேவியரே காட்டப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருத்தி காயத்திரி என்றும் மற்றவர் இந்திரேசுவரி அல்லது திரிபுவனா என்றும் நம்பப்படுகின்றது. இந்திரேசுவரிக்கு செயநகரனும், காயத்திரிக்கு திரிபுவன விஜயதுங்கதேவி, ராஜதேவி என்று இரு பெண்களும் பிறந்தனர். ராதன் விஜயனின் மறைவுக்குப் பின், மயபாகித்தின் இரண்டாவது பேரரசராக செயநகரன் முடிசூடிக் கொண்டார். அடிக்குறிப்புகள்
மேலும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia