இராஜசா அரசமரபு குசுமவருத்தினி (Kusumawardhani ) மஜபாகித் பேரரசை 1389-1400-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த ஐந்தாவது அரசி
இராஜசா அரசமரபு (ஆங்கிலம் : Rajasa dynasty இந்தோனேசியம் : Wangsa Rajasa ; பாலி மொழி : ꦫꦴꦗꦱ) என்பது இந்தோனேசியா , ஜாவா , சிங்காசாரி இராச்சியத்தை 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அரசமரபு ஆகும். பின்னர் இந்த அரசமரபு கிழக்கு ஜாவாவில் 13-ஆம் 15-ஆம் நூற்றாண்டுகளில் மஜபாகித் பேரரசையும் ஆட்சி செய்த அரசமரபு என அறியப்படுகிறது.
இராஜசா அரசமரபின் ஆட்சியாளர்களின் தோற்றத்தை, 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த அரச மரபை நிறுவிய செரி இரங்க ராஜசர் (Ken Arok ) என்பவரின் வழியாக அறிய முடிகிறது.
பாராரத்தோன் கூற்றுப்படி, செரி ரங்க ராஜசர், இன்றைய கிழக்கு ஜாவா , மாலாங் நகரில் பிறந்தார்.[ 1] இவர் சிங்காசாரி மற்றும் மஜபாகித் பேரரசுகளின் அரச மரபுகள் இரண்டையும் நிறுவியவராகக் கருதப்படுகிறார்.[ 2] பழைய ஜாவானிய மொழி ; மற்றும் சமசுகிருத மொழியில் இராஜசா என்ற சொல்லுக்கு ஆர்வம் அல்லது தூசி/மண் என்று பொருள்.[ 3]
ஆட்சியாளர்களின் பட்டியல்
சிங்காசாரி காலம்:
கென் அரோக் (Ken Arok ) - (1222—1227)[ 4] :185–187
அனுசபதி (Anusapati ) - (1227—1248)[ 4] :187–188
பாஞ்சி தோஜெயா (Panji Tohjaya ) (1248)[ 4] :188
விசுணுவருதன நரசிம்மமூர்த்தி (Vishnuwardhana-Narasimhamurti|) (1248—1268)[ 4] :188
கீர்த்தநகரன் (Kertanegara ) - (1268—1292)[ 4] :188
மயாபாகித்து பேரரசு காலம்:
ராதன் விஜயன் (Raden Wijaya ) - (1294—1309)[ 4] :232–233
செயநகரன் (Jayanegara ) - (1309—1328)[ 4] :233
அரசி திரிபுவன விஜயதுங்கதேவி (Tribhuwana Wijayatunggadewi ) - (1328—1350)[ 4] :234
ஆயாம் உரூக் (Hayam Wuruk ) - (1350—1389)[ 4] :234
விக்கிரமவர்தனன் (Wikramawardhana ) - (1389—1429)
அரசி குசுமவருத்தினி (Kusumawardhani ) - (1389—1400)
அரசி சுகித்தா (Suhita ) - (1429—1447)
கீர்த்தவிஜயா - (Kertawijaya) (1447–1451)
இராஜசவருதனா- (Rajasawardhana) (1451–1453), followed by three years of interregnum
கிரிசாவருதனா - (Girishawardhana) (1456–1466)
சூரபிரபவா - (Suraprabhawa) (1466–1474)
கிரிந்திரவருதனா - (Girindrawardhana) (1474–1498)
இராஜசா அரசமரபு
சிங்காசாரி மற்றும் மஜபாகித் அரசமரபு வரைபடம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்