நகரகீர்த்தாகமம்
நகரகீர்த்தாகமம் அல்லது தேசவர்ணம் (ஆங்கிலம்: Nagarakretagama; Nagarakṛtāgama; சாவகம்: Kakawin Nagarakretagama; இந்தோனேசியம்: Kakawin Nagarakretagama) என்பது, மஜபாகித் பேரரசின் ஜாவானிய மன்னரான ஆயாம் உரூக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஜாவானிய புகழார எழுத்துச்சுவடி ஆகும். இந்தச் சுவடி பாலி தீவில் தேசவர்ணனா அல்லது தேசவர்ணம் (Desawarnana; நாட்டின் விளக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது ஆயாம் உரூக்கின் கொள்ளுத் தாத்தாவான மன்னர் கீர்த்தநகரன் (Sri Maharajadiraja Sri Kertanagara Wikrama Dharmatunggadewa) (ஆட்சி: 1268–1292) பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியது.[2] நகரம் (சமசுகிருதம்: नगर; இந்தோனேசியம்: Nagara; ஆங்கிலம்: City)[3] கீர்த்தி (சமசுகிருதம்: गीत; இந்தோனேசியம்: Gīta; ஆங்கிலம்: Geertha);[4] ஆகமம் (சமசுகிருதம்: आगम; இந்தோனேசியம்: Agama; ஆங்கிலம்: Faith);[5] எனும் மூன்று சொற்களின் கலவையில் நகரகீர்த்தாகமம் எனும் சொல் உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[6] இந்த எழுத்துச்சுவடி 1365-ஆம் ஆண்டில், (சக ஆண்டு 1287) மாபூ பிரபஞ்சன் (Mpu Prapanca) என்பவரால் எழுத்தோலையில் எழுதப்பட்டது.[7][8] மாபூ (Mpu) என்பது 14-ஆம் நூற்றாண்டில், இந்தோனேசியாவின் இந்திய மயப் பேரரசுகளில், கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மரியாதைக்குரிய சொல் ஆகும்.[9] மஜபாகித் பேரரசின் ஆட்சிக் காலத்தில், அதன் உச்சக்கட்டப் பரப்பளவின் விரிவான விளக்கங்களை நகரகீர்த்தகம் கொண்டுள்ளது. இந்தக் கவிதைச் சுவடி, கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பல சடங்குகளை விவரிப்பதன் மூலம் மஜபாகித் பேரரசில் இந்து-பௌத்தத்தின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது. கையெழுத்துப் பிரதி![]() ![]() 1894-ஆம் ஆண்டில், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் நிறுவனம், லொம்போக்கின் கக்ரநேகரா அரச குடும்பத்திற்கு (Cakranegara Royal House) எதிராக ஓர் இராணுவப் படையெடுப்பைத் தொடங்கியது. அந்த ஆண்டு, லொம்போக்கில் அழிக்கப்பட்ட மாதரம்-சக்ரநகராவின் அரண்மனையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மதிப்புமிக்க லோம்போக் புதையலின் ஒரு பகுதியாக நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதியை இடச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர்.[10][11] நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்த முதல் மேற்கத்திய அறிஞர் ஜே.எல்.ஏ. பிராண்டஸ் (Jan Laurens Andries Brandes) எனும் ஒரு இடச்சு மொழியியலாளர் ஆவார். 1894-ஆம் ஆண்டு லோம்போக்கிற்கு இடச்சு இராணுவப் படையுடன் அவரும் சென்றார். போரின் போது ஏற்பட்ட குழப்பத்தில், லொம்போக் அரச நூலகத்தின் மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகளை எரிக்காமல் காப்பாற்றிய பெருமை அந்த இடச்சு மொழியியலாளருக்கு உண்டு. பின்னர் அந்தக் கையெழுத்துப் படிகளை மொழிபெயர்ப்பதில் இடச்சு அறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.[8] யுனெஸ்கோ அங்கீகாரம்நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதி பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பிரதி நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.[12] 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்த எழுத்துச்சுவடி, இந்தோனேசிய விடுதலை இயக்கத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும்; இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாகவும் மாறியது.[13] 1970-ஆம் ஆண்டு, அதிபர் சுகார்த்தோ நெதர்லாந்திற்கு அரசு முறை பயணம் செய்தபோது, நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதி இந்தோனேசியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.[14] இன்று, இந்த கையெழுத்துப் பிரதி இந்தோனேசிய தேசிய நூலகத்தில் உள்ளது. அதன் குறியீட்டு எண் NB 9 ஆகும். மே 2008-இல், நகரகீர்த்தாகமத்தின் முக்கியத்துவத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தது. அதற்கு "உலகின் நினைவகம் - ஆசியா/பசிபிக் பிராந்தியப் பதிவு" என்று பெயரிட்டது.[15] பின்னர் 2013-இல் அந்தப் பதிவு முறையாகப் பதிவு செய்யப்பட்டது.[16][17] மஜபாகித் பேரரசு விளக்கங்கள்அரசியல் வரலாறு குறித்து இந்தக் கவிதை நூல் எவ்வாறான தகவல்களை வெளிப்படுத்துகிறது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். பகுதிகள் 13 முதல் 14 வரையிலான பாடல்களில், கவிஞர் மாபூ பிரபஞ்சன் இன்றைய இந்தோனேசிய எல்லைக்குள் உறுப்பியம் பெற்ற பல மாநிலங்களின் பெயர்களை அடையாளப்படுத்தி உள்ளார். அந்த நிலப் பகுதிகள் மஜபாகித் பேரரசின் மண்டலத்திற்குள் இருந்தன என்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த மாநிலங்கள் மஜபாகித்தால் இணைக்கப்பட்டன அல்லது அடிமை மாநிலங்களாக இருந்தன என்றும் மாபூ பிரபஞ்சன் கூறியுள்ளார்.[18] நகரகீர்த்தாகமம் பகுதி 13-இல், சுமாத்திராவில் உள்ள பல நிலப்பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில பகுதிகள் சமகாலப் பகுதிகளுடன் ஒத்துப்போகின்றன. ![]() சுமாத்திரா
போர்னியோ பிலிப்பீன்சுமலாயாதீபகற்ப மலேசியாவில் ஊஜோங் மேதினி (ஜொகூர்); சிங்கப்பூர்: பகாங், இலங்காசுகம், சியாம்வாங், கிளாந்தான், திராங்கானு, ஜொகூர், பாக்கா, மூவார், டுங்குன், துமாசிக் (இன்று சிங்கப்பூர்), கிள்ளான் (கிள்ளான் பள்ளத்தாக்கு), கெடா, ஜெராய் (ஜெராய் மலை) மற்றும் கஞ்சபினிரான் போன்ற இடங்கள் பதிவாகி உள்ளன. மஜபாகித் தலைநகரின் விளக்கம்நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதி மஜபாகித்தின் தலைநகரை பற்றியும் விவரிக்கிறது. நகரகீர்த்தாகமம் கவிதைச் சுவடியில் மாபூ பிரபஞ்சன் கூற்றுப்படி, அரச வளாகம் சிவப்பு செங்கற்களால் ஆன தடிமனான, உயரமான சுவரால் சூழப்பட்டிருந்தது. அருகிலேயே கோட்டை காவல் நிலையம் இருந்தது. அரண்மனையின் பிரதான வாயில் வடக்குச் சுவரில் அமைந்திருந்தது. மேலும் அலங்கரிக்கப்பட்ட இரும்பால் ஆன பெரிய கதவுகள் வழியாக நுழைவாயிலில் இருந்தன.[22] வடக்கு நுழைவாயிலுக்கு வெளியே ஒரு நீண்ட கட்டடம் இருந்தது, அங்கு அரசவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கூடினர். ஒரு சந்தை இடம் மற்றும் ஒரு புனிதமான குறுக்கு வழிகள் இருந்தன. வடக்கு வாயிலுக்குள் மதக் கட்டிடங்களைக் கொண்ட ஒரு முற்றம் இருந்தது. இந்த முற்றத்தின் மேற்குப் பக்கத்தில் மக்கள் குளிப்பதற்காக கால்வாய்களால் சூழப்பட்ட மண்டபங்கள் இருந்தன. அரண்மனை நுழைவாயில்தெற்கு முனையில் ஒரு நுழைவாயில் அரண்மனை ஊழியர்கள் வசிக்கும் மொட்டை மாடி வீடுகளின் வரிசைகளுக்கு வழிவகுத்தது. மற்றொரு வாயில் வீடுகளால் நிரம்பிய மூன்றாவது முற்றத்திற்கு இட்டுச் சென்றது; மற்றும் ஆட்சியாளரின் முன்னிலையில் அனுமதிக்கப் படுவதற்காகக் காத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய மண்டபம் இருந்தது. முற்றத்தின் கிழக்கே அமைந்திருந்த மன்னரின் சொந்த குடியிருப்புகளில், அலங்கரிக்கப்பட்ட சிவப்பு செங்கல் தளங்களில்; மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட மரத் தூண்கள் மற்றும் களிமண் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட கூரைகள் இருந்தன. அரண்மனைக்கு வெளியே சிவன் வழிப்பாட்டு பூசாரிகள், பௌத்தர்கள் மற்றும் பிரபுக்களின் பிற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகள் இருந்தன. அரண்மனையிலிருந்து சற்று தொலைவில், முதலமைச்சர் கஜா மடாவின் வளாகம் உட்பட, மற்ற அரசு அதிகாரிகளின் அரச வளாகங்கள் இருந்தன.[22][23] மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia