ராப்தி மண்டலம்![]() ராப்தி மண்டலம் (Rapti zone) (நேபாளி: राप्ती अञ्चल ⓘ) தெற்காசியாவின் மத்தியமேற்கு நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றானது. இம்மண்டலம் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளது. ராப்தி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் துளசிபூர் ஆகும். இம்மண்டலத்தின் பிற முக்கிய நகரங்களும், ஊர்களுமாக திரிபுவன்நகரம், பியுத்தான் காலங்கா, பிஜுவார், லிவாங் ரோல்பா, லாமஹி, முசிகோட், ருக்கும்கோட் மற்றும் சௌர்ஜாஹரி விளங்குகிறது. ஆறுகள்இம்மண்டலத்தில் பாயும் ரப்தி ஆற்றின் பெயரால் இம்மண்டலம் ராப்தி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ரப்தி ஆறு ரோல்பா மாவட்டம், பியுத்தான் மாவட்டங்களையும், பபாய் ஆற்றால் சல்யான் மாவட்டத்தின் பகுதிகளையும் மற்றும் டாங் மாவட்டத்தின் பகுதிகளை வளம் கொழிக்கச் செய்கிறது. பேரி ஆற்றால் ருக்கும் மாவட்டம் செழிக்கிறது. மாவட்டங்கள்ராப்தி மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. உள் தராய் பகுதியில் தாங் மாவட்டமும், குன்றுப் பகுதிகளில் பியுட்டான் மாவட்டம், ரோல்பா மாவட்டம் மற்றும் சல்யான் மாவட்டங்களும், இமயமலைப் பகுதிகளில் ருக்கும் மாவட்டம் அமைந்துள்ளது. புவியியல்ராப்தி மண்டலத்தின் தெற்கில் உள்ள டாங் மாவட்டத்தின் தெற்கெல்லையாக இந்தியாவும், வடக்கில் அமைந்த ருக்கும் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக திபெத் தன்னாட்சிப் பகுதியும் உள்ளது. இம்மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களில் டாங் மாவட்டம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக உள்ளது. நேபாளத்தின் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் மகேந்திரா நெடுஞ்சாலை, ராப்தி மண்டலத்தின் துயுக்குரி சமவெளி வழியாகச் செல்கிறது. பியுத்தான், ரோல்பா மற்றும் சல்யான் மாவட்டங்கள் மத்திய குன்றுப் பகுதிகளிலிருந்து வடக்கே மகாபாரத மலைத் தொடர்கள் வரை அமைந்துள்ளது. தட்ப வெப்பம்ராப்தி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,500 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளதால், இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [1] மக்கள் தொகையியல்2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மண்டலத்தின் மக்கள் தொகை 14,56,202 ஆகும். [2] இம்மண்டலத்தில் நேபாள மொழி, இந்தி மொழி, உருது மொழி, அவதி மொழி, லிம்பு மொழி, ராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தாமாங் மொழி, மஹர் மொழி, குரூங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி மற்றும் திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது. பொருளாதாரம்இம்மண்டலத்தில் ரப்தி ஆறு, காளிகண்டகி ஆறு, பேரி ஆறு, கர்னாலி ஆறு, காக்ரா ஆறுகள் பாய்வதால் நெல், கோதுமை, கரும்பு, சோளம் பயிரிடப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia