ருக்கும் மாவட்டம்![]() ![]() ருக்கும் மாவட்டம் (Rukum District) (நேபாளி: रुकुम जिल्लाⓘ)தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்திருந்த இம்மாவட்டத்தை, 2015-இல் மேற்கு ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்கு ருக்கும் மாவட்டம் என இரண்டாகப் பிரித்தனர். புவியியல் தட்ப வெப்பம்![]() ருக்கும் மாவட்டம், ராப்தி மண்டலத்தின் வடக்கில் இமயமலையில் அமைந்துள்ளது. பேரி ஆறு மற்றும் காக்ரா ஆறு எனப்படும் கர்னாலி ஆற்றின் துணை ஆறுகள், ருக்கும் மாவட்ட வடிநிலமாக உள்ளது. மக்காச்சோளம், பார்லி, நெல், கோதுமை, உருளைக் கிழங்கு மற்றும் பழ வகைகள் இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஆறு காலநிலைகளில் காணப்படுகிறது.[1] போக்குவரத்து வசதிகள்தாங்- சல்யன் – ருக்கும் வழியாக செல்லும் சாலை, தாங் மாவட்டத்தின் துளசிப்பூர் நகரத்தையும், ருக்கும் மாவட்டத்தின் முசிகோட் நகரத்தையும் நான்கு மணி நேரப் பயணித்தில் இணைக்கிறது. காட்மாண்டிலிருந்து ருக்கும் மாவட்டத்தின் முசிகோட்டிற்கு சாலை வழியாக பயணிக்க இருபத்தி நான்கு நேரம் பயண நேரமாக உள்ளது. ருக்கும் மாவட்டத்தில் சௌர்ஜஹரி மற்றும் சல்லே என இரண்டு சிறு வானூர்தி நிலையங்கள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள்இம்மாவட்டத்தில் 47 கிராம வளர்ச்சி மன்றங்களும், சௌர்ஜஹரி எனும் ஒரு நகராட்சி மன்றமும் செயல்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia