ரோல்பா மாவட்டம்28°22′N 082°33′E / 28.367°N 82.550°E ![]() ![]() ரோல்பா மாவட்டம் (Rolpa) (நேபாளி: रोल्पा जिल्लाⓘ), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் உள்ளது. காட்மாண்டு நகரத்திலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான லிவாங் நகரம் அமைந்துள்ளது. ரப்தி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,879 சதுர மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,21,177 ஆக உள்ளது. [1]இம்மாவட்டத்தில் நேபாள மொழி, காம் மொழி, நேவாரி மொழி மற்றும் ஆங்கில மொழி பேசப்படுகிறது. பொருளாதாரம்ஆண்டு வருமானம் நூறு டாலருக்கும் குறைவாக ஈட்டும் ரோல்பா மாவட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதால், மக்களின் சராசரி வாழும் வயது ஐம்பத்தி இரண்டுக்கும் கீழ் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. 1996 – 2006 நேபாள உள்நாட்டுப் போரில் இம்மாவட்டத்தின் பெயர் அதிக அளவில் பிரபலமானது. ரோல்பா மாவட்டத்தின் வடக்கு மலைப்பகுதிகளில் உள்ளூர் மலைவாழ் மக்களான காம் மகர் மக்கள் பெருமளவில் உள்ளனர். மலப்படுகைகளில் நெல் பயிரிடப்படுகிறது. மேட்டுப் பகுதிகளில் சோளம், தானியங்கள், பார்லி பயிரிடப்படுகிறது. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி குன்றிய இம்மாவட்ட மக்கள் கஞ்சா, மரிஜுவான, சரஸ், ஹஷிஷ் போன்ற போதை தரும் செடிகளை வளர்த்து, அறுவடை செய்து, பதப்படுத்தி காட்மாண்டுவில் உள்ள அரசு கிடங்குகளுக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் பலர் உடலால் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாகவும் பணி செய்கின்றனர். நேபாள மாவோயிஸ்ட் பொதுவுடமைக் கட்சி இம்மாவட்டத்தில் வலிமை மிக்கதாக உள்ளது.[2] மாவட்ட எல்லைகள்ரோல்பா மாவட்டத்தின் தெற்கில் தாங் மாவட்டம், கிழக்கில் பியுத்தன் மாவட்டம், மேற்கில் சல்யான் மாவட்டம், வடக்கில் ருக்கும் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இமயமலையில் தவலாகிரியிலிருந்து தெற்கில் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரோல்பா மாவட்டம் மலைகளால் சூழ்ந்தது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 4,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ் மலை காலநிலை என நான்கு காலநிலைகளில் காணப்படுகிறது. [3] உள்ளாட்சி நிர்வாகம்![]() கிராமப் பகுதிகள் மட்டுமே கொண்ட இம்மாவட்டத்தின் கிராமப்புற நிர்வாகத்திற்காக நாற்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்கள் செயல்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia