மேற்கு ருக்கும் மாவட்டம்![]() மேற்கு ருக்கும் மாவட்டம் (West Rukum) (நேபாளி: पश्चिम रुकुम) நேபாளத்தின் மேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேசத்தின் (முன்னாள் நேபாள மாநில எண் 6) 10 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் முசிகோட் கலங்கா ஆகும் நிர்வாக வசதிக்காக ருக்கும் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு மேற்கு ருக்கும் மாவட்டமும்; கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு ருக்கும் மாவட்டமும் 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்டது. 1213.49 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மேற்கு ருக்கும் மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 1,54,272 ஆகும்.[1][2] மாவட்ட எல்லைகள்மேற்கு ருக்கும் மாவட்டத்தின் வடக்கில் டோல்பா மாவட்டம், கிழக்கில் கிழக்கு ருக்கும் மாவட்டம், தென்கிழக்கில் ரோல்பா மாவட்டம், தென்மேற்கில் சல்யான் மாவட்டம், மேற்கில் ஜாஜர்கோட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்மேற்கு ருக்கும் மாவட்டம் 3 நகர்புற நகராட்சிகளையும்; 3 கிராமிய நகராட்சி மன்றங்களையும் கொண்டது.[1][3] நகர்புற நகராட்சிகள்
கிராமிய நகராட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia